கொடைக்கானல்,

ற்போது கொடைக்கானல் பகுதியில் வசித்து வரும் மணிப்பூரின் இரும்பு பெண்மணி, தனது திருமணத்திற்காக கொடைக்கால் சார்பதிவாளரிடம் மனு கொடுத்துள்ளார்.

இதன் காரணமாக இன்னும் ஒரு மாதத்திற்குள் அவரது திருமணம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

தனது காதலரான  தேஷ்மந்த் கோட்டின்கோ என்பவரை மணமுடிப்பதற்கான விண்ணப்பத்தை கொடைக்கானல் பதிவாளரிடடம்  இரோம் ஷர்மிளா மனு தாக்கல் செய்துள்ளார்.

இதையடுத்து இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் நடக்க இருப்பதாக இரோம் ஷர்மிளாவின் காதலர் தேஷ்மந்த் கோடின்கோ கூறி உள்ளார்.

இரோம் ஷர்மிளா, தற்போது கொடைக்கானலில் தங்கி இருக்கிறார். தனது இளமைக்காலம் முழுவதையும் போராட்டத்தில் கழித்த இரோம் சர்மிளா, தேர்தல் கொடுத்த பலத்த தோல்வி காரணமாக சொந்த மாநிலமான மணிப்பூரை விட்டு வெளியேறினார்.

நாட்டின் பல மாநிலங்களுக்கு சென்று வந்த இராம் இறுதியாக தமிழகம் வந்தார். தமிழகத்தின் கலாச்சாரம் மற்றும் சீதோஷ்ண நிலை தனக்கு மிகவும் பிடித்துபோய் உள்ளதாக  கூறிய இரோம் தற்போது கொடைக்கானலில் தங்கி உள்ளார்.

தனது காதலர், தேஷ்மந்த் கோட்டின்கோவுடன் கொடைக்கானலில் உள்ள அப்சர்வேட்டரி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து அவர் தங்கியுள்ளார்.

தேஷ்மந்த் கோட்டின்கோ அயர்லாந்தை சேர்ந்தவர். அவருக்கு,  அவரது நாட்டிலிருந்து கிடைக்க வேண்டிய திருமணம் தொடர்பான அனுமதிக் கடிதத்துக்காக இருவரும் காத்துக்கொண்டிருப்ப தாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த அனுமதி கடிதம் வந்த நிலையில், கொடைக்கானல் பதிவாளர் அலுவல கத்தில் அவர் திருமணத்துக்காக விண்ணப்பித்துள்ளார்.

அந்த மனுவை ஏற்ற அதிகாரிகள், 30 நாட்களுக்கு பிறகு திருமணம் செய்துக்கொள்ளலாம் என்றும் அவகாசம் கொடுத்துள்ளனர்.

இரோம் சர்மிளாவின் காதலர் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்பதால், இந்தியாவில் யாருக்கேனும் இந்தத் திருமணத்தில் ஆட்சேபனை உள்ளதா என்பதைத் தெரிவிக்கவே இந்த அனுமதிக் காலம் என்று விளக்கமளித்துள்ள அதிகாரிகள், யாரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்றால்  திருமணம் நடத்தி வைக்கப்படும் என்று கூறி உள்ளார்.

இதன் காரணமாக இன்னும் ஒரு மாதத்திற்குள் இரோமின் திருமண வாழ்க்கை தொங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.