பெங்களூரு

ணிப்பூர் மாநில போராளி இரோம் சர்மிளாவுக்கு அன்னையர் தினத்தன்று இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன.

கணவருடன் இரோம் சர்மிளா

மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த இரோம் சர்மிளா மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்தவர் அவார். இவர் கடந்த மணிப்புர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டத்தை ரத்து செய்யக் கோரி போராட்டம் நடத்தினார். அந்த போராட்டத்தில் அவர் 16 ஆண்டுகள் உண்ணாவிரதம் இருந்தார். கடந்த 2016 ஆம் ஆண்டு அவர் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.

அதன் பிறகு அவர் கொடைக்கானலில் குடி புகுந்தார். அங்கு அவருக்கும் கோவாவில் பிறந்த பிரிட்டன் நாட்டினரான டாச்மாண்ட் கவுட்டினோ வை திருமணம் செய்துக் கொடார். தற்போது குழந்தை பிறப்புக்காக அவர் தனது கணவருடன் பெங்களூரு வந்துள்ளார்.

இவருக்கு கடந்த ஞாயிறு அன்று அதாவது அன்னையர் தினத்தன்று இரு பெண் குழந்தைகள் பிறந்துள்ளன.  சுமார் 46 வயதாகும் இரோன் சர்மிளாவுக்கு பெங்களூருவில் மல்லேஸ்வரம் பகுதியில் உள்ள கிளவுட்நைன் மருத்துவமனையில் பிறந்துள இரட்டை  குழந்தைகளுக்கு நிக்ஸ் சாகி மற்றும் ஆடம் தாரா என பெயரிட உள்ளனர்.