
பரோடா: இடைவெளி விட்டு துவங்கியுள்ள கிரிகெட்டில் போட்டிகளில், அதிக சவால் என்பது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு மட்டுமே என்றுள்ளார் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்ஃபான் பதான்.
அவர் கூறியுள்ளதாவது, “நீண்ட இடைவெளிக்குப் பிறகு களமிறங்கும் பேட்ஸ்மென்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்களைப் பொறுத்தவரை, அவர்கள் தங்களுடைய ஃபார்மை எளிதாக மீட்டுவிடுவர்.
ஆனால், வேகப்பந்து வீச்சாளர்களுக்குத்தான் நிலைமை சவாலானது. அவர்களை நினைத்தால்தான் வலையாக உள்ளது. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு குறைந்தபட்சம் 4 முதல் 6 வாரங்கள் வரை பயிற்சி தேவைப்படும்.
23 மீட்டர் தொலைவிலிருந்து ஓடிவந்து, 140 கி.மீ. முதல் 150 கி.மீ. வரை பந்துவீசுவது சாதாரணமானதல்ல. எனவே, அவர்களுக்கு துவக்க ஓவர்கள் கடிமனாக இருக்கும். ஓய்வு காலத்தில் அவர்களின் தசைகள் சற்று பிடிப்பாகி இருக்கும்.
காயம் உண்டாவதற்கு வாய்ப்புள்ள விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டு. எனவேதான், நான் 6 வாரகால ஓய்வைப் பரிந்துரைத்தேன்” என்றார்.
Patrikai.com official YouTube Channel