டெல்லி:
கொரோனா சிகிச்சைக்காக குறைந்த கால அளவிலான பாலிசிகளை கொண்டுவர, மருத்துவ காப்பீடு நிறுவனங்களுக்கு  ஐஆர்டிஏ அனுமதி வழங்கி உள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி உள்ள நிலையில், இந்தியாவிலும், அதன் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் ஆகும் செலவு அதிகம் என்பதால், மருத்துவக்காப்பீட்டில் கொரோனா சிகிச்சையும் சேர்க்கும்படி வலியுறுத்தப்பட்டு வந்தது.
இதையடுத்து காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏ)  கொரோனா சிகிச்சைக்கான  செலவுகளையும் ஏற்கக்கூடிய வகையிலான மருத்துவ காப்பீடு பாலிசிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு ம், கொரோனா தொற்றால்,  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெறுவோருக்கு ஆகும் செலவை ஏற்கும் வகையிலான பாலிசிகளில் கொரோனாவையும் சேர்க்க வேண்டும் என மருத்துவ காப்பீட்டு நிறுவனங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டிருந்தது.
அதன்படி, அனைத்து காப்பீட்டாளர்களும் (ஆயுள், பொது மற்றும் சுகாதாரம்) வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு COVID-19 குறிப்பிட்ட குறுகிய கால சுகாதார காப்பீட்டுக் கொள்கைகளை வழங்க அனுமதிக்கப்படுகிறார்கள் என்று இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், கொரோனா தொற்றுக்கு எதிரான  குறுகிய கால சுகாதாரக் கொள்கைகளை வழங்க மருத்துவ காப்பீடு நிறுவனங்களை  ஐஆர்டிஏ அனுமதித்துள்ளது.
அதன்படி,  “குறுகிய கால பாலிசிகள் குறைந்தபட்சம் மூன்று மாதங்கள் முதல் அதிகபட்சம் பதினொரு மாதங்கள் வரை வழங்கப்படலாம் என்றும்,  “மூன்று மாதங்கள் மற்றும் பதினொரு மாதங்களுக்கு இடையில், பாலிசி காலம் பூர்த்தி செய்யப்பட்ட மாதங்களின் மடங்காக இருக்கும்” என்று வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.