
பாக்தாத்: கொரோனா வைரஸ் தாக்குதலால், ஈரான் நாட்டின் நவீன கட்டடக்கலை தந்தை என்று அழைக்கப்படும் ரிபாத் சதீர்ஜி மரணமடைந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அவருக்கு வயது 93 எனவும், அவர் லண்டனில் சிகிச்சைப் பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. அவரின் மரண செய்தியை, ஈராக் அதிகாரிகள் மற்றும் ரிபாத் சதீர்ஜியின் நண்பர்கள் உறுதிபடுத்தினர்.
கட்டடக்கலைஞரும் போட்டோகிராபருமான ரிபாத் சதீர்ஜி, ஈராக்கில் மிகவும் பிரபலமான, சில கட்டமைப்புகளை வடிவமைத்த பெருமைக்குரியவர்.
பாக்தாத்தின் தஹ்ரிர் சதுக்கத்தின் தற்போதைய போராட்டக்கள மையமான சுதந்திர நினைவுச் சின்னத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
20ஆம் நுாற்றாண்டினுடைய ஈராக்கின் மாபெரும் வீரர் என அனைவராலும் போற்றப்படுகிறார்.
Patrikai.com official YouTube Channel