ஈரானில் 50 ஆயிரத்தை கடந்த கொரோனா பலி: மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்த வாய்ப்பு

Must read

டெஹ்ரான்: ஈரானில் கொரோனா வைரசுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 321 போ் கொரோனாவுக்கு உயிரிழந்தனா். அதையடுத்து நாட்டில் கொரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது. 24 மணி நேரத்தில் 12,151 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 10,28,986 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தாக்கம் மீண்டும் அதிரிகத்துள்ளதால், டெஹ்ரானிலும் பிற நகரங்களிலும் பொது முடக்கம் மீண்டும் அமல்படுத்தப்படலாம் என்று அதிபா் ஹஸன் ரௌஹானி கூறி உள்ளார்.

ஆகையால், கொரோனா தடுப்பு விதிமுறைகளை பொதுமக்கள் அனைவரும் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

More articles

Latest article