டெல்லி: வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் எதிரொலியாக சென்னையில் 36 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. மேலும், “இஸ்ரேல்- ஈரான் போர்பதட்டும் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் இருந்து, மத்திய கிழக்கு பகுதிகளுக்கு இயக்கப்படும், விமான சேவைகள் மூன்றாவது நாளாக, பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு போர் பதற்றத்தால் சென்னை விமான நிலையத்தில் 36 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

சென்னை விமான நிலையத்தில் மூன்றாவது நாளாகிய இன்று, துபாய், அபுதாபி, சார்ஜா, குவைத், மஸ்கட் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல வேண்டிய 18 புறப்பாடு விமானங்கள், இந்த நாடுகளில் இருந்து, சென்னைக்கு வரவேண்டிய 18 வருகை விமானங்கள், மொத்தம் 36 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இன்று திடீரென தாக்குதல்களை நடத்த தொடங்கியதை அடுத்து, ஈரான் பதிலுக்கு, அமெரிக்காவின் ஏவுதலங்கள் இருக்கும் பகுதிகளை, ஏவுகணைகள் ராக்கெட்டுகளை வீசி தாக்குதலை நடத்த தொடங்கியது. இதை அடுத்து மத்திய கிழக்கு நாடுகள் பகுதியில், கடந்த சனிக்கிழமை முதல், பெரும் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஈரான் உள்ளிட்ட சில நாடுகள் தங்களுடைய வான்வழிப் பகுதிகளை மூடிவிட்டது.
இதனால் மத்திய கிழக்கு பகுதிகளில் விமான சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் சென்னை விமான நிலையத்தில் இருந்து, சனிக்கிழமை துபாய், அபுதாபி, பஹ்ரைன், மஸ்கட், இயக்கப்படும் 16 வருகை விமானங்களும், அதைப்போல் புறப்பாடு விமானங்கள் 12, மொத்தம் 28 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் நாளாக தொடர்ந்து வளைகுடா நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள் ஆகியவற்றுக்கு புறப்பட்டு செல்லும் அதைப்போல் அங்கிருந்து சென்னைக்கு வரும் விமானங்களும் தொடர்ந்து ரத்தாகி, மற்றும் 33 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இன்று மூன்றாம் நாளாகிய திங்கட்கிழமை, சென்னை விமான நிலையத்தில் வளைகுடா ஐக்கிய அரபுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் விமானங்கள், மூன்றாம் நாளாகிய இன்று, சென்னையில் இருந்து துபாய், அபுதாபி, சார்ஜா, பக்ரைன், குவைத், மஸ்கட் உள்ளிட்ட 18 புறப்பாடு விமானங்கள், அதைப்போல் இந்த நாடுகளில் இருந்து சென்னைக்கு வரவேண்டிய 18 வருகை விமானங்கள், மொத்தம் 36 விமானங்கள், இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதோடு லண்டன், அமெரிக்கா, ஜெர்மன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சென்னை வரும் பல்வேறு விமானங்கள், ஈரான், மத்திய கிழக்கு நாடுகளின் வான் வொளிகளை கடந்து வரவேண்டிய நிலையில் உள்ளது. ஈரான் உள்ளிட்ட நாடுகளின் வான்வெளிகள் மூடப்பட்டுள்ளதால், மாற்றுப் பாதைகளில் சுற்றி வருவதால், அந்த விமானங்கள் சென்னைக்கு வந்து விட்டு, மீண்டும் புறப்பட்டு செல்வதற்கு பல மணி நேரம் தாமதம் ஆகலாம், அல்லது விமானம் ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளது.
எனவே மற்ற விமானங்களில் பயணம் செய்ய இருக்கும் பயணிகளும், குறிப்பாக அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்ய இருக்கும் பயணிகள், அந்தந்த விமான நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு, தங்களுடைய விமானங்கள் வரும் நேரம், மீண்டும் சென்னையில் இருந்து புறப்பட்டு செல்லும் நேரம் போன்றவைகளை தெளிவாக தெரிந்து கொண்டு, அதற்குத் தகுந்தார் போல் தங்கள் பயணங்களை அமைத்துக் கொள்ளும் படியும் அறிவுறுத்தி உள்ளனர்.
இந்தநிலையில் சென்னையில் இருந்து வளைகுடா நாடுகள் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் அனைத்தும் ஒட்டு மொத்தமாக ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். அதே நேரத்தில் சென்னையில் இருந்து சிங்கப்பூர் மலேசியா இலங்கை லண்டன் தாய்லாந்து ஜெர்மன், ஹாங்காங் உள்ளிட்ட மற்ற நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கி வருகின்றன.
[youtube-feed feed=1]