‘பாகிஸ்தானுக்குள் நுழைந்து தாக்குவோம்’! ஈரான் எச்சரிக்கை!

Must read

தெகரான்,

யங்கரவாதிகளை கட்டுப்படுத்தாவிட்டால், பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாதிகளை தாக்குவோம் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாகிஸ்தான் தனது பயங்கரவாத நடவடிக்கையை இந்திய மட்டுமல்லாமல் அண்டை நாடுகளிடமும் காண்பித்து வருகிறது.

இந்நிலையில்,  பாகிஸ்தானுக்குள் நுழைந்து பயங்கரவாதிகளை  அழிப்போம் என்று ஈரான் ராணுவ தளபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவில் காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளை தூண்டிவிட்டு இந்தியாவுக்கு எதிராக அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதுபோல  ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு ஆதரவான நடவடிக்கையைப் பாகிஸ்தான் மேற்கொண்டு வருகிறது.

மலைப்பகுதிகளில் மறைவாக இருக்கும் தலிபான்கள், அவ்வப்போது ஆப்கானிஸ்தான் அரசுப் படைகள் மீது தாக்குதுல் நடத்துவது, சுற்றுலாப் பயணிகள் மற்றும் தொண்டு பணிக்கு வந்தவர்களைக் கடத்திக் கொலைசெய்வது போன்ற செயல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரானில் உள்ள ஷியா முஸ்லிம்கள் மீது, சன்னி இஸ்லாமிய ஆதரவு தீவிரவாத அமைப்புகள் அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றன. இந்தத் தீவிரவாத அமைப்புகளுக்குப் பாகிஸ்தான் ஆதரவு அளிப்பதாகக் கூறப்படுகிறது.

சில வாரங்களுக்கு முன்பு, ஜெய்ஷ் அல் அடல் என்ற தீவிரவாத அமைப்பு நடத்திய தாக்குதலில்,  ஈரான் எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து, ஈரான் ராணுவ தளபதி முகமது பக்கேரி, “இதுபோன்ற தாக்குதல்களை இனிமேலும் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது.  இதுபோன்ற நடவடிக்கைகளை பாகிஸ்தான் கட்டுப்படுத்தாவிட்டால். பாகிஸ்தான் எல்லைக்குள் ஈரான் ராணுவம் நுழைந்து பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடி அவர்களை சொர்க்கத்துக்கு அனுப்பிவைக்கும் என்று அதிரடியாக கூறி உள்ளார்.

இதற்கிடையில் ஈரான் வெளியுறவு மந்திரி முகமது ஜவாத் ஜரீப் கடந்த வாரம் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்த போது, பிரதமர் நவாஸ் ஷெரிப்பிடம்  எல்லை பாதுகாப்பு பலப்படுத்த கோரியிருந்து குறிப்பிடத்தக்கது.

எற்கனவே கடந்த , 2014ம் ஆண்டு ஜெய்ஷ் அல் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி ஐந்து ஈரான் பாதுகாப்புப் படையினரை கடத்திச் சென்றனர்.

இதேபோல் கடந்த 2013ம் ஆண்டு 14 எல்லைக்காவல் படையினரையும், 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8 எல்ல பாதுகாப்பு படையினர்களையும் சுட்டுக்கொன்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article