டெக்ரான்: இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போர் ஏற்பட்டுள்ள நிலையில், போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தற்போது வாய்ப்பில்லை என  ஈரான் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பின் கோரிக்கையை நிராகரித்துள்ளது.

பகல்ஹாம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால், இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டபோது, இரு நாடுகளும் போர் வேண்டாம் என முடிவெடுத்த போது,  அமெரிக்க அதிபர் டிரம்ப் தான்தான் இரு நாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்ததாக தம்பட்டம் அடித்தார். ஆனால், அதை இந்தியா கண்டுகொள்ளாமல், பாகிஸ்தான் ராணுவ தளபதி கேட்டுக் கொண்டதற்கு இணங்கவே போர் நிறுத்தம் செய்யப்பட்டது என கூறியது.

இந்த நிலையில், தற்போது இஸ்ரேல் ஈரானுக்கு இடையே போர் தொடங்கி உள்ளதால்,  தான் மத்தியஸ்தம் செய்கிறேன் என்று வாய்ச்சவடால் விட்டார். அவரது பேச்சை இரு நாடுகளும் மறுத்து விட்டன. ஈரான் ,   இஸ்ரேலுடன் போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தற்போது வாய்ப்பில்லை திட்டவட்டமாக  தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு தக்க பதிலடியை கொடுத்த பின்னரே போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு ஈரான் முன்வரும் என்று கத்தார் மற்றும் ஓமன் நாடுகளிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.