தெஹ்ரான்: இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே முழு அளவில் மற்றும் ஒட்டுமொத்தத்தில் போர்நிறுத்தம் ஏற்பட்டு உள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு வெளியிட்ட நிலையில், டிரம்பின் கூற்றுக்கு ஈரான் மறுப்பு தெரிவித்து உள்ளது.
டொனால்ட் டிரம்ப் முழுமையான போர் நிறுத்தத்தை அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, ஈரான் “போர் நிறுத்தத்தின் பொய் வரும் மணிநேரங்களில் காட்டப்படும்” என்று பதிலடி கொடுத்துள்ளது. அதிகாரப்பூர்வ அல்லது அதிகாரப்பூர்வமற்ற போர் நிறுத்த திட்டம் எதுவும் பெறப்படவில்லை என்று ஈரானிய அரசு ஊடகங்கள் கூறுகின்றன. கத்தாரில் அமெரிக்க தளத் தாக்குதலுக்குப் பிறகு மௌனம் கலைத்த காமெனி, ஈரான் சரணடையாது என்றும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தைத் தொடருவதாகவும் உறுதியளித்தார்.
போர் நிறுத்தம் பற்றியோ, ராணுவ நடவடிக்கைகள் தொடர்பாகவோ எந்தவித ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படவில்லை என ஈரானின் வெளியுறவு துறை அமைச்சர் சையது அப்பாஸ் அராக்சி விளக்கம் அளித்துள்ளார்.
இஸ்ரேல் ஈரான் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்காவும் இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் கடும் கோபமடைந்த ஈரான் தலைவர் கமேனி, அமெரிக்காவுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று கூறியதுடன், கத்தாலில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தின்மீது கடுமையான தாக்குதலை நடத்தியது.
இதையடுத்து அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரான், இஸ்ரேல் ஆகிய இருநாடுகளும் முழுமையான போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளன என்று கூறியதுடன், இந்த புத்திசாலித்தனமான முடிவு எடுத்த இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளையும் நான் வாழ்த்த விரும்புகிறேன். இது பல ஆண்டுகளாக நீடித்து, முழு மத்திய கிழக்கையும் அழித்திருக்கக்கூடிய ஒரு போர், ஆனால் அது தற்போது நடக்கவில்லை. கடவுள் இஸ்ரேலை ஆசீர்வதிப்பாராக, கடவுள் ஈரானை ஆசீர்வதிப்பாராக, கடவுள் மத்திய கிழக்கை ஆசீர்வதிப்பாராக, கடவுள் அமெரிக்காவை ஆசீர்வதிப்பாராக, கடவுள் உலகை ஆசீர்வதிப்பாராக என தனது சமூக வலைதளத்தில் டிரம்ப் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், டிரம்பின் அறிவிப்புக்கு ஈரான் பதில் தெரிவித்துள்ளது. போர் நிறுத்தம் பற்றியோ, ராணுவ நடவடிக்கைகள் தொடர்பாகவோ எந்தவித ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படவில்லை என ஈரானின் வெளியுறவு துறை அமைச்சர் சையது அப்பாஸ் அராக்சி விளக்கம் அளித்துள்ளார்.
இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல் தொடர்ந்து நடந்து வருகிறது. போரை நிறுத்துவது பற்றிய இறுதி முடிவு பின்னர் எடுக்கப்படும். அந்த முடிவை எங்களுடைய தலைவரே மேற்கொள்வார். வேறு நாடுகளின் தலையீட்டிற்கு இதில் அனுமதி இல்லை. போரை மேற்கத்திய நாடுகளே தொடங்கின. அதனால், போரை நிறுத்துவது பற்றி ஈரானே முடிவு செய்யும்.
இஸ்ரேல் போரை நிறுத்தினால், நாங்களும் நிறுத்துவோம். ஈரான் மக்களுக்கு எதிரான சட்டவிரோத ஆக்கிரமிப்பை இஸ்ரேல் நிறுத்தினால், நாங்கள் போரை தொடரமாட்டோம் – என ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் சையது அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.