தெஹ்ரான்:

ஈரான் அதிபர் ஹசன் ரவுஹானி 3 நாள் பயணம் இந்த வாரம் இந்தியா செல்கிறார் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

வரும் 15ம் தேதி இந்தியா வரும் அவர் தற்போதைய பிராந்திய மற்றும் உலகளாவிய முன்னேற்றங்கள் குறித்த விவாதத்தில் பங்கேற்கிறார். அவரை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் தென்கிழக்கு பகுதியில் அமைந்து சபஹர் துறைமுகத்தை இந்தியாவும் ஈரானும் இணைந்து கடந்த டிசம்பரில் தொடங்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவுக்கான வர்த்தக பாதை உருவாக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் செல்லாமல் இந்தியா வரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

அணு ஆயுத பிரச்னையில் ஈரான் மீது 2012&16ம் ஆண்டுகளில் பொருளாதார தடை விதிக்கப்பட்டிருந்தபோதும் கச்சா எண்ணெய், காஸ் போன்வற்றை இறக்குமதி செய்து வர்த்தக தொடர்புகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.