நடிகர் ஆமிர்கானின் மகள் ஐரா கான் விரைவில் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார்.
ஆமிர்கானின் முதல் மனைவிக்கு பிறந்தவர் ஐரா கான் . இவர் இசை குறித்து படித்துள்ளார்.
தற்போது ஐரா கான் யூரிபிடீஸ் மெடீயா என்கிற மேடை நாடகம் மூலம் இயக்குநராகிறார். இந்த வருடம் டிசம்பர் மாதம் இந்த நாடகம் இந்தியாவில் குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டும் மேடையேறவுள்ளது.
ஐரா இந்த நாடகம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.