ஐபிஎல் 2023 மினி ஏலத்திற்கு முன்னதாக சிஎஸ்கே அணியில் தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
ஐபிஎல் போட்டிகளில் உள்ள அணிகளில் மிகவும் வெற்றிகரமான அணியாக விளங்கிவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் வரவிருக்கும் ஐபிஎல் 2023 மினி ஏலத்திற்காக தனது தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை பிசிசிஐயிடம் சமர்ப்பித்துள்ளது.
நான்கு முறை ஐபிஎல் வென்ற கேப்டன் எம்எஸ் தோனி, ரவீந்திர ஜடேஜா, மொயீன் அலி, ருதுராஜ் கெய்க்வாட், சிவம் துபே, டெவோன் கான்வே, முகேஷ் சவுத்ரி, டுவைன் பிரிட்டோரியஸ் மற்றும் தீபக் சாஹர் ஆகியோரை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
டுவைன் பிராவோ, கிறிஸ் ஜோர்டான், ஆடம் மில்னே, நாராயண் ஜகதீஷன் மற்றும் மிட்செல் சான்ட்னர் போன்றவர்களை விடுவிக்க உள்ளது.
ஐபிஎல் 2023க்கான சிஎஸ்கே வீரர்கள் பட்டியல்
சென்னை சூப்பர் கிங்ஸ் தக்க வைத்துக் கொண்ட பேட்ஸ்மேன்கள் :
எம்எஸ் தோனி (சி)
அம்பதி ராயுடு
டெவோன் கான்வே
ருதுராஜ் கெய்க்வாட்
சுப்ரான்சு சேனாபதி
சிஎஸ்கே தக்க வைத்துக் கொண்ட ஆல்-ரவுண்டர்கள்
ரவீந்திர ஜடேஜா
மொயீன் அலி
மிட்செல் சான்ட்னர்
டுவைன் பிரிட்டோரியஸ்
சிவம் துபே
ராஜ்வர்தன் ஹங்கர்கேகர்
சிஎஸ்கே தக்க வைத்துக் கொண்ட பந்துவீச்சாளர்கள்
தீபக் சாஹர்
முகேஷ் சவுத்ரி
மகேஷ் தீக்ஷனா
துஷார் தேஷ்பாண்டே
சிமர்ஜீத் சிங்
மதீஷா பத்திரன
பிரசாந்த் சோலங்கி
சிஎஸ்கே விடுவித்த வீரர்கள் பட்டியல்
டுவைன் பிராவோ
ராபின் உத்தப்பா (ஓய்வு)
ஆடம் மில்னே
ஹரி நிஷாந்த்
கிறிஸ் ஜோர்டான்
பகத் வர்மா
கே.எம்.ஆசிப்
நாராயண் ஜெகதீசன்
சிஎஸ்கே அணியில் காலியாக உள்ள இடங்கள் மொத்தம் 9 அதில் 2 வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்கள்.
இதற்காக 20.45 கோடி ரூபாய் கையிருப்பு உள்ளதால் இந்த மினி ஏலத்தில் சிஎஸ்கே அணி யாரை தேர்வும் செய்யும் என்பது பின்னர் தெரியவரும்.