அபுதாபி: 13வது ஐபிஎல் சீசனில் இன்று நடைபெறும் போட்டிகளில், சென்னை – பஞ்சாப் மற்றும் கொல்கத்தா – ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.

அபுதாபி மைதானத்தில் பிற்பகல் 3.30 மணிக்குத் துவங்கும் போட்டியில், பஞ்சாபை எதிர்கொள்கிறது தோனியின் சென்னை அணி. ஏற்கனவே, இந்த இரு அணிகளும் மோதிய போட்டியில், 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றிருந்தது சென்னை அணி.

துபாய் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் கொல்கத்தா – ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஏற்கனவே, இந்த இரு அணிகளும் மோதிய பாட்டியில், 37 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது கொல்கத்தா.