மும்பை: ஐபிஎல் பரிசுத்தொகை குறைப்பு மற்றும் ஒவ்வொரு போட்டிக்கும் ஐபிஎல் அணிகள் செலுத்த வேண்டிய கட்டண உயர்வு உள்ளிட்ட பிசிசிஐ முடிவுகளுக்கு, அணிகளின் சார்பில் எதிர்ப்பு எழுந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; கடந்த 4 ஆண்டுகளாக பிசிசிஐ நிர்வாகம் உச்சநீதிமன்ற கட்டுப்பாட்டிற்குள் இருந்ததால், ஐபிஎல் அணிகள் விரும்பிய வகையிலான புதிய முடிவுகளை எடுக்க இயலவில்லை.

தற்போது பிசிசிஐ அமைப்பிற்கு புதிய தலைவர் வந்துள்ள நிலையில், தங்களுக்கு சாதகமான முடிவுகள் எடுக்கப்படும் என்று ஐபிஎல் அணிகள் எதிர்பார்த்தன. ஆனால், அவர்கள் நினைத்ததற்கு மாறாக, எதிர்மறையான முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், இந்த முடிவுகள் தொடர்பாக, ஐபிஎல் அணிகளை கலந்தாலோசிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

எனவே, அந்த அணிகளின் சார்பில், பிசிசிஐ நிர்வாகத்திற்கு அதிருப்தி கடிதம் எழுதப்பட்டிருப்பதாகவும், ஐபிஎல் தொடர்பான முடிவுகளை, தங்களைக் கலந்தாலோசனை செய்த பின்னரே எடுக்க வேண்டுமென அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.