சென்னை:

சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதல் ஐபிஎல் 12வது சீசனில், சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா 5 ஆயிரம் ரன்களை கடந்து புதிய சாதனையை படைத்துள்ளார். அவருக்கு சக வீரர்கள் உள்பட உலக கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

2019ம்  ஆண்டின் ஐபிஎல் சீசன் நேற்று  சென்னையில் தொடங்கியது. தொடக்க போட்டியில் தோனியின் சென்னை அணியும், கோலியின் பெங்களூரு அணியும் மோதின. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய பெங்களூர் அணி 17.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 70 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 71 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக வாட்சனும், ராயுடுவும் வந்தனர். வாட்சன் 10 பந்துகளை எதிர் கொண்டார். சாஹல் பந்தில் டக் அவுட்டானார்.

அடுத்து களத்துக்கு வந்தார் ரெய்னா. இருவரும் நிதானமாக ஆடினர். நோபாலில் கிடைத்த ஃப்ரீ ஹிட் பந்துகளில் மேக்சிமம் ரன்களை எடுத்து ஆடி வந்தனர். சற்று ஆட்டத்தை வேகப்படுத்திய  ரெய்னா ஆர்சிபி பவுலர்களின்  பந்துகளை பவுண்டரிகளுக்கு விரட்டினார்.

15 ரன்களை எடுத்தால் 5,000 ஆயிரம் ரன்களை கடக்கும் முதல் வீரர் என்ற பெருமையை பெறலாம் என்ற சாதனைக்காக எதிர்நோக்கி இருந்த நிலையில், நேற்றைய அதிரடி ஆட்டத்தின் மூலம்  5,000 ரன்களை கடந்து ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனையை படைத்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். அவருக்கு சக வீரர்களும் கிரிக்கெட் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

நேற்று ஆட்டத்தின்போது கோலி சிறப்பாக ஆடியிருந்தார், இந்த சாதனையை அவர் பெற்றிருக்கு வாய்ப்பு உண்டு. ஆனால்,  அவர் தவற விட்ட வாய்ப்பை ரெய்னா செய்து சாதனை படைத்துள்ளார்.

இந்த சாதனையை படைக்க இந்திய வீரர்கள் கோலியை தொடர்ந்து, ரோகித் சர்மா 4493 ரன்களுடன் தயாராக இருக்கிறார். அவரும் இந்த ஆண்டு ஐபில் தொடரில் 5ஆயிரம் ரன்களை கடந்த வீரர் பட்டியலில் இடம்பிடிக்க வாய்ப்பு உள்ளது…. பார்க்கலாம்… இன்னும் பல போட்டிகள் உள்ளன….

ய்னாவின் இந்த புதிய சாதனையால் உற்சாகம் அடைந்த ரசிகர்கள் சின்ன தல… சின்ன தல என்று அரங்கத்தில் குரலெழுப்பி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.