ஜெய்ப்பூர்:

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின.

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ராகுல் திரிபாதியும், ஜோல்டா ஆர்ச்சரும் களமிறங்கினர். 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்ததுள்ளது.

164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி விளையாடியது. 20 ஓவர் முடிவில் 134 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பெங்களூரு அணி தோல்வி அடைந்தது.

ராஜஸ்தான் அணி சார்பில் ஷ்ரேயஸ் கோபால் 4 விக்கெட் கைப்பற்றினார். பென் லாப்லின், ஜெயதேவ் உனத்கட் ஆகியோர் 2 விக்கெட்களை கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி பிளே ஆப் சுற்றை தக்கவைத்துக் கொண்டது.