துபாய்: 13வது ஐபிஎல் தொடர் அமீரகத்தில் நடைபெற்றுவரும் நிலையில், தற்போதைய நிலையில் புள்ளிப் பட்டியலில் மும்பை முதலிடத்திலும், பஞ்சாப் அணி கடைசி இடத்திலும் உள்ளன.
மொத்தம் 6 போட்டிகளில் 4ல் வென்ற மும்பை அணி 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. டெல்லி அணி 5 போட்டிகளில் 4ல் வென்று அதே 8 புள்ளிகளைப் பெற்றிருந்தாலும், ரன் ரேட் அடிப்படையில் மும்பையைவிட பின்தங்கி, இரண்டாமிடத்தில் உள்ளது.
மூன்றாமிடத்தில் 6 புள்ளிகளுடன் பெங்களூரு அணியும், நான்காமிடத்தில் 4 புள்ளிகளுடன் கொல்கத்தா அணியும், அதே 4 புள்ளிகளுடன் ஐந்தாமிடத்தில் சென்னை அணியும் உள்ளன.
தலா 4 புள்ளிகள் பெற்றுள்ள ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகளைவிட, ரன் ரேட் அடிப்படையில் சென்னை அணி முன்னால் உள்ளது குறிப்பிடத்தக்கது. 2 புள்ளிகள் மட்டுமே பெற்ற ராகுலின் பஞ்சாப் அணி கடைசி இடத்தில் உள்ளது.