பாரிஸ்: பிரெஞ்சு ஓபன் காலிறுதிக்கு நோவக் ஜோகோவிக், டொமினிக் தியம், கிவிட்டோவா உள்ளிட்டோர் முன்னேறியுள்ளார்.
ஆண்கள் ஒற்றையர் நான்காவது சுற்றில் செர்பியாவின் ஜோகோவிக், ரஷ்யாவின் கரேனை வென்றார். மற்றொரு 4வது சுற்றில், ஆஸ்திரியாவின் டொமினிக் தியம், பிரான்சின் காஸ்டனை வென்றார். இதன்மூலம், இவர்கள் இருவரும் காலிறுதிக்கு முன்னேறினர்.
இவர்கள் தவிர, ரஷ்யாவின் ருபெலெவ், ஹங்கேரியின் பக்சோவிச்சை வென்றும், கிரீஸ் நாட்டின் டிசிட்பாஸ், பல்கேரியாவின் டிமிட்ரோவை வென்றும் காலிறுதிக்கு முன்னேறினர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில், செக் குடியரசின் கிவிட்டோவா, சீனாவின் ஷுவாய் பெங்கை 4வது சுற்றில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு பிரிவில், ஜெர்மனியின் லாரா சீஜ்மண்ட், ஸ்பெயினின் பதோசாவை வென்று காலிறுதியில் நுழைந்தார்.