ஐதராபாத்:

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய 2வது ஆட்டம் ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதி வருகின்றன.

இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர் முடிவில் ஐதராபாத் அணி 172 ரன்கள் எடுத்தது. 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி விளையாடி வருகிறது