ராய்ப்பூர்: இந்தியாவில் தொடர்ச்சியாக நடத்தப்படும் ஐபிஎல் போட்டிகள், இந்திய கிரிக்கெட்டின் வைப்புத் திறனை அதிகரிக்க உதவுகிறது என்றுள்ளார் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர்.
இங்கிலாந்துக்கு எதிரான டி-20 தொடரில் பங்கேற்று விளையாடிய இந்திய அணியில் இடம்பெற்ற சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர். இவர்கள் இருவரும் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளனர். இவர்களின் செயல்திறனை, ஐபிஎல் போட்டிகளோடு ஒப்பிட்டுள்ளார் சச்சின்.
“ஐபிஎல் தொடர் மூலம், உலகளாவிய தரம் கொண்ட வீரர்களுடன் விளையாடும் வாய்ப்புகள் கிடைக்கின்றன. இதனால், இளம் வீரர்களின் திறமை மேம்படுகிறது.
நாங்கள் முன்பு வாசிம் அக்ரமிடம் முன்கூட்டிய விளையாட்டு அனுபவத்தைப் பெறவில்லை. அதேபோன்று, ஆஸ்திரேலியாவில் விளையாடும் முன்னதாக ஷேன் வார்னே, கிரேக் சேப்பல், மெக்டெர்மாட் மற்றும் மெர்வ் ஹுக்ஸ் ஆகியோரிடம் விளையாடிய அனுபவத்தைப் பெற்றதில்லை” என்றுள்ளார் சச்சின்.