மும்பை:
11-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் டோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து ஐதராபாத் அணி பேட்டிங் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்ரீவட்ஸ் கோஸ்வாமி, ஷிகர் தவான் களமிறங்கினர். ஐதராபாத் அணி 20வது ஓவரில் 6 விக்கெட்களை இழந்து 178 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி பேட்டிங் செய்தது.
தொடக்க ஆட்டக்காரரான வாட்சன் அதிரடியாக விளையாடி 117 ரன்கள் அடித்தார். 19.3 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 179 ரன் அடித்து சென்னை அணி வெற்றி வாகை சூடியது.
[youtube-feed feed=1]