மும்பை:
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி வெற்றி பெற்றது.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டி, மும்பையில் உள்ள பிரபோர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (Brabourne Stadium) இன்று பிற்பகல் 03.30 மணிக்கு நடைபெற்றது. முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 177 ரன்களை எடுத்தது. அதைத் தொடர்ந்து, 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி 18.2 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

மாலை 7.30 மணிக்கு பெங்களூரூ – பஞ்சாப் அணிகள் இடையே நடந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களுரூ அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது. இந்த அணியில் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் அதிகபட்சமான 88 ரன்கள் அடித்தார். விராத் கோலி 41 ரன்கள் அடித்தார்.

பஞ்சாப் பந்து வீச்சாளர்களில் அர்ஷ்தீப் சிங், ராகுல் சாஹர் இருவரும் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

206 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய பஞ்சாப் அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரில் நாளை மாலை 7.30 மணிக்கு புனேவில் நடக்கும் போட்டியில் ஹைதராபாத் – ராஜஸ்தான் அணிகள் மொத உள்ளன.