12-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 23-ந் தேதி தொடங்கியது. எட்டு அணிகள் பங்கேற்ற போட்டிகளில் லீக் சுற்று முடிந்து இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன. இன்று பிளே ஆப் போட்டி நடைபெறுகிறது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே வெற்றி பெற்றால் நேரடியாக இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பு உருவாகும்… எனவே, இன்றைய போட்டி விறுவிறுப்பாக நடைபெறும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.
சென்னை கிரிக்கெட் ரசிகர்கள் இன்று காலை முதலே சேப்பாக்கம் ஸ்டேடியத்தை முற்றுகை யிட்டு உள்ளனர்.
12-வது ஐபிஎல் தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் பிளே ஆப் சுற்று போட்டிகள் இன்று முதல் துவங்குகின்றன. சென்னையில் இன்று நடக்கும் முதல் பிளே ஆப் சுற்றுப் போட்டியில் லீக் சுற்றுப் போட்டியில் முதல் இரு இடங்களைப், பிடித்த, மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இன்றையப் போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்பது உறுதி.
இந்தஆண்டு ஐபிஎல் தொடரில் முதல்இடத்தை மும்பை இந்தியன்ஸ் அணியும், 2வது இடத்தை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், 3வது இடத்தை டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், 4வது இடத்தை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளும் பிடித்துள்ளன. இந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன.
இதுவரை நடந்த ஐபிஎல் போட்டிகள் அனைத்திலும் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய ஒரே அணி தோனி தலைமையிலான சென்னை அணி மட்டுமே என்ற சாதனை படைத்துள்ளதுடன் ஏழு முறை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று அதில் 3 முறை சாம்பியன் பட்டத்தையும் தட்டிச் சென்றுள்ளது.
இந்த நிலையில், இன்று இரவு சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடக்கும் போட்டியில், முதலாவது தகுதி சுற்றில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இண்டியன்ஸ் அணியும் தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சும் மோதுகின்றன.
லீக் சுற்றில் இந்த இரு அணிகளுமே தலா 9 போட்டிகளில் வெற்றி பெற்று 18 புள்ளிகளுடன் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
இந்த இரு அணிகளும் தலா 3 முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தையும் வென்றவை என்பதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.
தற்போதைய நிலையில், சென்னை அணியில், கேப்டன் தோனி, சுரேஷ் ரெய்னா, டு பிளசிஸ் நல்ல பார்மில் உள்ளனர். ராயுடு, வாட்சன் ஆகியோர் இந்த தொடரில் தங்களது திறமைகளை வெளிப் படுத்த வில்லை. அதுபோல, சிஎஸ்கே அணியுன் ஆல்ரவுண்டர் ஜாதவும் காயம் காரணமாக போட்டியில் பங்கேற்காத சூழல் உள்ளது இந்த நிலையில், சிஎஸ்கே தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துமா என சென்னை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள்.
சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானது என்பதால் ஹர்பஜன் சிங், ஜடேஜா, இம்ரான் தாஹிர் ஆகியோரின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும். இதற்கு முன் இங்கு நடந்த போட்டிகளிலும் இவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
அதேவேளையில் மும்பை இந்தியன்ஸ் அணியையும் நாம் குறைத்து எடைபோட முடியாது.
மும்பை அணியில், கேப்டன் ரோகித் சர்மா, ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ், பொல்லார்ட் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். அவர்களின் அதிரடி அனைவரும் அறநித்தே. பந்து வீச்சில் பும்ரா, மலிங்கா, ராகுல் சாஹர், குணால் பாண்ட்யா ஆகியோர் திறமையானவர்கள். மலிங்காவின் பந்தை கண்டாலே பல வீரர்கள் மிரண்டுபோவது வாடிக்கை. இந்த நிலையில், மும்பை அணியின் பந்துவீச்சை சிஎஸ்கே எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்பது ஆட்டத்தின்போதுதான் தெரியும்.
இன்றைய போட்டியில் வெல்லும் அணி, இறுதிப்போட்டிக்கு நேரடியாகச் செல்லும். தோற்கும் அணிக்கு மற்றொரு வாய்ப்பும் உள்ளது.
எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் இன்று தோல்வி பெறும் அணி மோதி இறுதிப் போட்டி வாய்ப்பை உறுதி செய்யலாம் .
ஆகவே இன்றைய போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.