கொல்கத்தா:

ஐபிஎல் கிரிக்கெட் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் குவித்திருந்தது. இதனால் 200 ரன்னைத் கடந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. எனினும் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

டோனி 25 பந்தில் 4 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி பேட்டிங் செய்து வருகிறது.