புனே:
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டில்லி அணிக்கு எதிராக சென்னை அணி 20 ஓவரில் 211 ரன்கள் குவித்தது.

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் இன்று நடக்கும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை, டில்லி அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற டில்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பீல்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் பேட் செய்த சென்னை அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழந்து 211 ரன்கள் குவித்தது.
வாட்சன் 78, கேப்டன் தோனி 51 அவுட் இல்லை, அம்பதி ராயுடு 41, டுபிளசி 33 ரன்கள் எடுத்தனர். டில்லி அணி வீரர்கள் அமித் மிஸ்ரா, விஜய் சங்கர், மேக்ஸ்வெல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்வை கைப்பற்றினர்.
212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டில்லி அணி பேட்டிங் செய்து வருகிறது.
Patrikai.com official YouTube Channel