
பெங்களூரு:
பரபரப்பாக இன்று நடைபெற்று வரும் ஐபிஎல் ஏலத்தில் ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய பிராவோ-ஐ ஏலம் எடுத்து தக்க வைத்துக்கொண்டுள்ளது.
ஏற்கனவே தோனி, ரெய்னா, ஜடேஜா தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று நடைபெற்று வரும் ஏலத்தில் ஹர்பஜன் சிங்கை சிஎஸ்கே 2 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்தது.
இந்நிலையில், 6.4 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்து மேற்கு இந்திய வீரர் பிராவோவை மீண்டும் தக்க வைத்துள்ளது சிஎஸ்கே அணி.
இன்று காலை 10.30 மணி முததல் பெங்களூரில் ஐபிஎல் 11வது சீசனுக்கான ஏலம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கடந்த ஆண்டு பிரோவோ, குஜராத் அணிக்காக விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel