சென்னை; ஐபிஎல் போட்டியின் இன்றைய ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மேக் ஸ்டேடியத்தில் இன்று மாலை நடைபெற உள்ளது. இந்த போட்டியை காண டிக்கெட் பெற்றவர்கள், அரசு பேருந்து மற்றும் மெட்ரோ ரயிலில் டிக்கெட்டை காண்பித்து இலவசமாக பயணிக்கலாம்.

நடப்பாண்டுக்கான ஐபிஎல் 2025 சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி நடைபெட்றறு வருகிறது. இது ஐபிஎல் 18வது சீசனாகும். முதல் போட்டி, கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதியது. இதுவரை 48 லீக் போட்டிகள் நடைபெற்றுள்ளன.
இன்று ஐ.பி.எல். போட்டியின் 49-வது லீக் ஆட்டம், சென்னை சேப்பாக்கம் எம்ஏசிதம்பரம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இன்றைய போட்டியாது, சிஎஸ்கேவுக்கும், கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி இடையே நடைபெற உள்ளது.
இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே ஆடிய பெரும்பாலான போட்டிகளிலும் தோல்வி பெற்று, சிஎஸ்கே ரசிகர்களிடையே பெறும் சோகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், இன்றைய லீக் போட்டியானது, டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இடையே நடைபெறுகிறது.
சிஎஸ்கே இதுவரை 9 போட்டியில் விளையாடி இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள நிலையில், இன்றைய போட்டியிலும் வெற்றிபெறுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் ப்ளெம்மிங், “அடுத்து வரும் 6 போட்டிகளையும் சிஎஸ்கே வென்று ப்ளே ஆப்ஸூக்கு செல்வோம் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. இப்படியொரு நிலையிலிருந்து எப்படி வெல்வது என்பதற்கான ப்ளூ ப்ரிண்டை RCB அணி கடந்த ஆண்டு அமைத்துக் கொடுத்திருக் கிறது. ஒருவேளை நாங்கள் தகுதிப்பெறாவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதிலும் தெளிவாக இருக்கிறோம்.
நாங்கள் கடந்த காலங்களிலும் இதே மாதிரியான நிலையில் இருந்திருக்கிறோம். ஆனால், பிரச்சனைகளை சரி செய்து அடுத்த ஆண்டே சாம்பியனும் ஆகியிருக்கிறோம். அடுத்து வரும் அத்தனை போட்டிகளையும் எங்களை சரி செய்துகொள்வதற்கான வாய்ப்பாகத்தான் பார்க்கிறோம். எந்த வாய்ப்பையும் தவறவிடமாட்டோம் என்று கூறினார்.