மும்பை: ஐபிஎல்2025 போடிடிகள் நாளை தொடங்க உள்ள நிலையில், ஐ.பி.எல் கோப்பையுடன் 10 அணிகளின் கேப்டன்கள் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.
கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிற, இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) 18வது பதிப்பு மார்ச் 22, 2025 அன்று கொல்கத்தா ஈடன் கார்டனில் கோலாகலமாக தொடங்குகிறது. இந்த தொடக்க விழாவில் பாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் இடம்பெற உள்ளது.
ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் 18வது சீசன் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் வருகிற மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த சீசனிலும் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கவுள்ளன. இந்த சீசனுக்கான மெகா ஏலம் கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது. இதில் 62 வெளிநாட்டவர் உள்பட 182 வீரர்கள் ரூ.639.15 கோடிக்கு வாங்கப்பட்டனர். இதனையடுத்து ஐபிஎல் அணிகள் தங்களது வீரர்களை தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
முதல் போட்டி நாளை தொடங்க உள்ளது. முதல் போட்டியானது கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் இடையே கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. போட்டி தொடங்கும் நேரம் மற்றும் எந்த சேனல்களில் ஒளிபரப்பாகும் என்ற விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.
2024 ஐபிஎல் தொடரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கைப்பற்றிய நிலையில், அந்த அணி முதல் போட்டியில் விளையாட உள்ளது. இந்த போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சந்திக்கிறது.
இந்த நிலையில், ஐபிஎல் கோப்பையுடன் 10 அணியின் கேப்டன்களும் குழு புகைப்படம் எடுத்துக்கொண்ட போட்டோவை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டு உள்ளது.
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ள 10 அணி கேப்டன்களுடன் இந்திய கிரிக்கெட் வாரியம் மும்பையில் இன்று ஆலோசனை நடத்தியது. இதனை தொடர்ந்து 10 கேப்டன்களும் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ள 2025 ஐபிஎல் தொடரின் முதல் போட்டி இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு தொடங்கும். இந்த போட்டிக்கான டாஸ் நிகழ்வு 7 மணிக்கு நடைபெறும். அதற்கு முன்பு துவக்க விழா நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து போட்டி நடைபெறும்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதும் முதல் ஐபிஎல் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் பார்க்கலாம்.
மொபைல் மற்றும் இணையத்தில் இந்த போட்டியை காண விரும்புபவர்கள் ஜியோ ஹாட்ஸ்டார் செயலி மற்றும் இணையதளத்தில் இந்த போட்டிகளை காணலாம்.
ஜியோ ஹாட்ஸ்டாலில் ஐபிஎல் தொடரை இலவசமாக பார்க்க முடியாது. ஐபிஎல் தொடரை ஜியோ ஹாட்ஸ்டாரில் பார்க்க விரும்புபவர்கள் மார்ச் 17ஆம் தேதிக்குப் பிறகு தங்களின் ஜியோ எண்ணுக்கு ரூபாய் 299 அல்லது அதற்கும் மேல் ரீசார்ஜ் செய்திருக்க வேண்டும். இல்லையெனில் ஜியோ ஹாட்ஸ்டாரில் சந்தா செலுத்தி இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.