மார்ச் 22ம் தேதி சென்னையில் துவங்கிய ஐபிஎல் 2024 போட்டிகளின் முழு அட்டவணை இன்று வெளியானது.

நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகும் சூழலில் கிரிக்கெட் தொடர்புடைய அரசியல் பிரபலங்கள் கலந்து கொள்வது குறித்து கவலையடைந்த ஜெய் ஷா இந்த போட்டி தொடரின் முதல் இரண்டு வார அட்டவணையை மட்டும் ஏற்கனவே வெளியிட்டிருந்தார்.

தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கேற்றாற் போல் ஆட்டத்தை நடத்த திட்டமிட்டு முழு அட்டவணை இன்று வெளியிட்டுள்ளது.

மே 21ம் தேதி முதல் குவாலிபயர் போட்டியும் மே 22ம் தேதி எலிமினேட்டர் போட்டியும் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.

மே 24ம் தேதி இரண்டாவது குவாலிபயர் போட்டியும் அதனைத் தொடர்ந்து மே 26ம் தேதி இறுதிப் போட்டியும் சென்னையில் நடைபெற உள்ளது.

[youtube-feed feed=1]