சென்னை: தமிழக கிரிக்கெட் ரசிகர்களின் ஏகோபித்த ஐபிஎல் போட்டிகள் நாளை சென்னையில் தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்குபெறும் அணிகள் மற்றும் அணியில் விளையாடும் வீரர்கள் விவரம் வெளியாகி உள்ளது.

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள்,  ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் தொலைக்காட்சி லைப் ஸ்டிரிமிங் செய்கிறது. மேலும்,  ரசிகர்கள்  ஜியோ சினிமாவில் லைவ் ஸ்ட்ரீம் பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்போட்டி, நாளை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது.  இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவன்களான தல தோனி மற்றும் விரோட்கோலி தலைமையிலான அணிகள் மோதுகின்றன. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த போட்டி, நாளை   சென்னை சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இரு அணிகளிலும் ஏகப்பட்ட அனுபவம் வாய்ந்த வீரர்கள் இடம்பெற்றுள்ளன.

 ஐபிஎல் 2024 போட்டியின் போது பல்வேறு போட்டிகளில் பங்கேற்கும். ஒவ்வொரு அணியும் இந்தியாவில் வெவ்வேறு நகரங்களில் விளையாடுகிறது. இந்த ஆண்டு 10 அணிகள் மோதுகின்றன. ஒவ்வொரு அணிக்கும் யார் கேப்டன் என்பது குறித்த விவரம் மற்றும் அணியில் பங்கேற்கும் வீரர்கள்  கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

  1. மும்பை இந்தியன்ஸ் – கேப்டன்: ஹர்திக் பாண்டியா
  2. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – கேப்டன்: ஸ்ரேயாஸ் ஐயர்
  3. சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) – கேப்டன்: மகேந்திர சிங் தோனி
  4. பஞ்சாப் கிங்ஸ் – கேப்டன்: மயங்க் அகர்வால்
  5. டெல்லி கேபிடல்ஸ் – கேப்டன்கள்: ரிஷப் பண்ட் / டேவிட் வார்னர்
  6. ராஜஸ்தான் ராயல்ஸ் – கேப்டன்: சஞ்சு சாம்சன்
  7. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – கேப்டன்: கேன் வில்லியம்சன்
  8. லக்னோ சூப்பர் ஜாயின்ட்ஸ் – கேப்டன்: கே.எல்.ராகுல்
  9. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – கேப்டன்: விராட் கோலி
  10. குஜராத் டைட்டன்ஸ் – கேப்டன்: சுப்மான் கில்

சென்னை சூப்பர் கிங்ஸ்:
ருதுராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரா, அஜிங்க்யா ரஹானே, மொயின் அலி, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, மகேந்திர சிங் தோனி (கேப்டன் & விக்கெட் கீப்பர்), ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், மகேஷ் தீக்ஷனா, முஸ்தாபிசுர் ரஹ்மான் மற்றும் முகேஷ் சவுத்ரி.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:
விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), கரண் சர்மா, மயங்க் டாகர், ரீஸ் டாப்லி, முகமது சிராஜ் மற்றும் விஜய்குமார் விஷக்.

டெல்லி கேப்பிடல்ஸ்:
டேவிட் வார்னர், பிரித்வி ஷா, மிட்செல் மார்ஷ், ரிஷப் பந்த் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், லலித் யாதவ், அக்சர் படேல், குல்தீப் யாதவ், அன்ரிச் நார்ட்ஜே, முகேஷ் குமார் மற்றும் கலீல் அகமது.

குஜராத் டைட்டன்ஸ்:
சுப்மன் கில் (கேப்டன்), விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்ஷன், டேவிட் மில்லர், விஜய் சங்கர், ஷாருக் கான் , ராகுல் தெவாடியா, ரஷித் கான், நூர் அகமது, உமேஷ் யாதவ், ஸ்பென்சர் ஜான்சன் மற்றும் மோகித் சர்மா.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
பில் சால்ட் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா, ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ரின்கு சிங், ஆண்ட்ரே ரசல், ஹர்ஷித் ராணா, சுனில் நரைன், மிட்செல் ஸ்டார்க், வைபவ் அரோரா, வருண் சக்ரவர்த்தி மற்றும் சுயாஷ் சர்மா.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்:
கே.எல். ராகுல் (கேப்டன்), குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), தேவ்தத் பாடிக்கல், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரன், மார்கஸ் ஸ்டோனிஸ், க்ருனால் பாண்டியா, ஷிவம் மாவி, ஆயுஷ் படோனி, நவீன் உல் ஹக், ரவி பிஷ்னோய் மற்றும் மொஹ்சின் கான்.

மும்பை இந்தியன்ஸ்:
ரோஹித் சர்மா, இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டிம் டேவிட், நேஹல் வதேரா, ரொமாரியோ ஷெப்பர்ட், பியூஷ் சாவ்லா, ஆகாஷ் மத்வால், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் நுவான் துஷாரா.

பஞ்சாப் கிங்ஸ்:
ஷிகர் தவான் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ், பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்), அதர்வா டெய்டே, லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா, சாம் குர்ரான், ஹர்ஷல் படேல், ஹர்பிரீத் பிரார், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர் மற்றும் அர்ஷ்தீப் சிங்.

ராஜஸ்தான் ராயல்ஸ்:
யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ரோவ்மன் பவல், ஷிம்ரோன் ஹெட்மியர், ரியான் பராக், துருவ் ஜூரல், ரவிசந்திரன் அஸ்வின், டிரென்ட் போல்ட், சந்தீப் சர்மா, அவேஷ் கான் மற்றும் யுஸ்வேந்திர சாஹல்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:
அபிஷேக் சர்மா, மயங்க் அகர்வால், ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), அப்துல் சமத், வாஷிங்டன் சுந்தர், வனிந்து ஹசரங்கா, பாட் கம்மின்ஸ் (கேப்டன்) , புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக் மற்றும் தங்கவேல் நடராஜன்.

போட்டிகள் விவரம்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) மார்ச் 22 முதல் ஏப்ரல் 7 வரை புதிய சீசனின் 21 போட்டிகளைக் கொண்ட ஒரு பகுதி அட்டவணையை வெளியிட்டது. ஐபிஎல் 2024 இறுதிப் போட்டி மே 26 அன்று நடைபெறும் – அமெரிக்கா மற்றும் கரீபியனில் நடைபெறும் ஐசிசி உலக டி 20 2024 தொடக்க ஆட்டத்திற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு நடைபெறும். இந்த சீசனின் தொடக்க ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடைபெறும். மீதமுள்ள போட்டிகள் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. பிற்பகல் 3.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. அட்டவணை, போட்டி நேரம் விவரங்கள் வெளியிடப்பட்டுஉள்ளது.

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024 அட்டவணை

மார்ச் 22, இரவு 8:00 மணி: CSK vs RCB, சென்னை.

மார்ச் 23, பிற்பகல் 3:30 மணி: PBKS vs DC, மொஹாலி.

மார்ச் 23, இரவு 7:30 மணி: கேகேஆர் – எஸ்ஆர்எச்.

மார்ச் 24, பிற்பகல் 3:30 மணி: ராஜஸ்தான் ராயல்ஸ் – எல்எஸ்ஜி, ஜெய்ப்பூர்.

மார்ச் 24, இரவு 7:30 மணி: ஜிடி vs எம்ஐ, அகமதாபாத்.

மார்ச் 25, இரவு 7:30 மணி: ஆர்சிபி vs பிபிகேஎஸ், பெங்களூரு.

மார்ச் 26, இரவு 7:30 மணி: சிஎஸ்கே எதிர் ஜிடி சென்னை.

மார்ச் 27, இரவு 7:30 மணி: SRH vs MI, ஹைதராபாத்.

மார்ச் 28, இரவு 7:30 மணி: RR vs DC, ஜெய்ப்பூர்.

மார்ச் 29, இரவு 7:30 மணி: ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகள் மோதின.

மார்ச் 30, இரவு 7:30 மணி ஐஎஸ்டி: எல்எஸ்ஜி vs பிபிகேஎஸ், லக்னோ.

மார்ச் 31, பிற்பகல் 3:30 மணி: GT vs SRH, அகமதாபாத்.

மார்ச் 31, இரவு 7:30 மணி: டெல்லி – சிஎஸ்கே, விசாகப்பட்டினம்.

ஏப்ரல் 1, இரவு 7:30 மணி: மும்பை மும்பை எம்ஐ எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

ஏப்ரல் 2, இரவு 7:30 மணி: ஆர்சிபி vs எல்எஸ்ஜி, பெங்களூரு.

ஏப்ரல் 3, இரவு 7:30 மணி: டெல்லி – கே.கே.ஆர், விசாகப்பட்டினம்.

ஏப்ரல் 4, இரவு 7:30 மணி: GT vs PBKS, அகமதாபாத்.

ஏப்ரல் 5, இரவு 7:30 மணி: SRH vs CSK, ஹைதராபாத்.

ஏப்ரல் 6, இரவு 7:30 மணி: RR vs RCB, ஜெய்ப்பூர்

ஏப்ரல் 7, பிற்பகல் 3:30 மணி: MI vs DC, மும்பை.

ஏப்ரல் 7, இரவு 7:30 மணி: எல்எஸ்ஜி vs ஜிடி, லக்னோ.