ஜெய்ப்பூர்

நேற்றைய ஐ பி எல் போட்டியில் ராஜஸ்தான் அணியை எளிதில் குஜராத் டைடன்ஸ் அணி வென்றுள்ளது.

நேற்றைய ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டி ஜெய்ப்பூரில் நடந்தது.   இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங் தேர்வு செய்ய, அதன்படி, முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 17.5 ஓவரில் 118 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

அப்போது குஜராத் அணியின் ஆப்கன் பவுலர்கள் ரஷீத் கான், நூர் அகமதுவின் துல்லியமான சுழல் பந்துவீச்சில் ராஜஸ்தான் சிக்கி சிதறியது. அவ்வணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் அதிகபட்சமாக 30 ரன்களும், டிரெண்ட் போல்ட் 15 ரன்களும் எடுத்தனர். இதில் குஜராத் சார்பில் ரஷீத் கான் 3 விக்கெட்டும், நூர் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

குஜராத் அணீ 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி களமிறங்கி 13.5 ஓவரில் வெற்றியை பெற்றது. இதில் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பில் விரித்திமான் சகாவும், ஷுப்மன் கில்லும் ஜொலிக்க அந்த அணி விரைவாக ரன்களை குவிக்க ஆரம்பித்தது. இரு வீரர்களும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்தனர்.

பிறகு ஷுப்மன் கில் 36 ரன்னில் அவுட்டாக சகாவுக்கு தோள் கொடுத்தார் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா. இவர்கள் இருவரும் விக்கெட்டை பறிகொடுக்காமல் அதிரடியாக ஆடி வெற்றியை தேடிக் கொடுத்தனர். சகா 41 ரன்களும், பாண்ட்யா 39 ரன்களும் எடுத்து இறுதிவரை அவுட்டாகாமல் இருந்தனர். அட்ட இறுதியில், குஜராத் அணி 13.5 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 119 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

குஜராத் டைடன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.