மும்பை:
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணியும், லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணியும் வெற்றி பெற்றன.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா – டெல்லி அணிகள் மோதிய போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 215 ரன் குவித்தது. அக்சர் படேல் 22 ரன் (14 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்), ஷர்துல் 29 ரன்னுடன் (11 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். கேகேஆர் பந்துவீச்சில் சுனில் நரைன் 2, உமேஷ், வருண், ரஸ்ஸல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
216 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய கொல்கத்தா அணி 19.4 ஓவரில் 171 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. வருண் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். டெல்லி பந்துவீச்சில் 4 ஓவரில் 35 ரன் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றிய குல்தீப் யாதவ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். கலீல் அகமது 3, ஷர்துல் 2, லலித் 1 விக்கெட் வீழ்த்தினர். டெல்லி அணி 2 புள்ளிகளை தட்டிச் சென்றது.
ராஜஸ்தான் – லக்னோ அணிகள் இடையே நடந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையத்து இதனையடுத்து முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. பின்னர் 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்க உள்ள போட்டியில் ஹைதராபாத் – குஜராத் அணிகள் மோத உள்ளன.