மும்பை: 15வது ஐபிஎல் தொடர் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணி அளவில் தொடங்கியது. சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த ஐபிஎல் திருவிழா இன்று தொடங்கி உள்ளது. சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருந்த தோனி பதவி விலகிய நிலையில், ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதன்முதலாக போட்டியை எதிர்கொள்கிறது.

ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும், சிஎஸ்கே அணிக்கும் இன்று முதல் போட்டி தொடங்கி உள்ளது. . இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

டாஸ்க்கு பின் செய்தியாளரிடம்  பேசிய கேகேஆர் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர்,  நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். இந்த ஜெர்சியை அணிவது பெரிய கவுரவம். இந்த அணிக்காக விளையாடி வரும் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.  நாங்கள் மூன்று வெளிநாட்டு வீரர்களுடன் செல்கிறோம் என்றார்.

சிஎஸ்கே கேப்டன் ரவிந்திர ஜடேசா பேசும்போது, சிஎஸ்கே அணியில் 4 வெளிநாட்டு வீரர்கள் களமிறங்கி உள்ளனர். உற்சாகமாக போட்டிகளை எதிர்கொள்வோம் என்று கூறினார்.

சிஎஸ்கே ப்ளேயிங் லெவன் : ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, ராபின் உத்தப்பா, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா (கேப்டன்), ஷிவம் துபே, எம்.எஸ். தோனி (விக்கெட் கீப்பர்), டுவைன் பிராவோ, மிட்செல் சான்ட்னர், ஆடம் மில்னே, துஷார் தேஷ்பாண்டே

கேகேஆர் ப்ளேயிங் லெவன் : வெங்கடேஷ் ஐயர், அஜிங்க்யா ரஹானே, ஸ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), நிதிஷ் ராணா, சாம் பில்லிங்ஸ்(விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், ஷெல்டன் ஜாக்சன், உமேஷ் யாதவ், சிவம் மாவி, வருண் சக்கரவர்த்தி

முன்னதாக இன்று போட்டி தொடங்க இருந்த நிலையில்,  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் இந்தாண்டிற்கான விசில் தீம் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் வழக்கம் போல் சென்னை சூப்பர் கிங்ஸூக்கு விசில் போடு என்ற தல தோனி வழக்கம் போல் தன்னுடைய பாணியில் கூறும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோவை சிஎஸ்கே ரசிகர்கள் பலரும் பார்த்து தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அத்துடன் அனைவரும் விசில் போட தயராக உள்ளனர்.