சென்னை: ஐபிஎல் 14வது சீசனுக்காக ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மதியம் 2 மணி அளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க உள்ள 8 அணிகளிலுமாக மொத்தம் 61 இடங்கள் காலியாக உள்ளன. அதிகபட்சமாக ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரில் 11 இடங்களும், குறைந்தபட்சமாக சன்ரைசா்ஸ் ஹைதராபாதில் 3 இடங்களும் காலியாக உள்ளன. ஏலப்பட்டியலில் ஷாருக் கான், எம். சித்தார்த், ஹரி நிஷாந்த், சோனு யாதவ், அருண் கார்த்திக், ஜி. பெரியசாமி, பாபா அபராஜித், எம். முகமது ஆகிய 8 தமிழக வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள்.
இந்த நிலையில், இன்றைய ஏலத்தின்போது, ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சரை பிரபல மொபைல் நிறுவனமான விவோ மீண்டும் கைப்பற்றி உள்ளது. அதைத் தொடர்ந்து, சுமார் 3 மணி அளவில் வீரர்கள் ஏலம் தொடங்கியது.
முதல் வீரராக இந்திய வீரர் கருண் நாயர் ஏலம் விடுக்கப்பட்ட நிலையில், அவரை எந்தவொரு அணியும் எடுக்க முன்வரவிலை. அதைத்தொடர்ந்து ஏலம் விடப்பட்ட அலெக்ஸ் ஹேல்ஸ், அதிரடி வீரர் ஜேசன் ராய் போன்றோரும் விலை போகவில்லை. அதுபோல ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பின்ச், இந்திய வீரர் கேதர் ஜாதவ், அலெக்ஸ் கெல்ஸ், வெஸ்ட் இண்டீஸ் வீரர் எவின் லூயிஸ் ,ஆஸ்திரேலிய அணியின் ஆரோன் பிஞ்ச், இந்திய அணியின் ஹனுமான் விஹாரி ஆகியோரை யாரும் ஏலம் எடுக்க வில்லை
ஏலம் விடப்பட்ட ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித்தை டெல்லி அணி ரூ.2.2 கோடிக்கு ஏலம் எடுத்தது
அதைத்தொடர்ந்து மேக்ஸ்வெல்லை ஏலம் எடுக்க சிஸ்கே அணிக்கும், பெங்களூரு அணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இதில், பெங்களூரு அணி, 14.25 கோடி ரூபாய்க்கு மேக்ஸ்வெல்லை ஏலம் எடுத்தது.
ஷாகிப் அல் ஹசனை 3.20 கோடிக்கு கொல்கத்தா அணி ஏலம் எடுத்தது.
மேக்ஸ்வெல் கிடைக்காத நிலையில் மொயின் அலியை எடுக்க சிஎஸ்கே .ரூ.7 கோடிக்கும் அதிகமான விலை கொடுத்து ஏலம் எடுத்தது.
சிவம் துபே பெங்களூர் அணி மூலம் ஏலம் எடுக்கப்பட்டார். ஏற்கனவே பெங்களூர் அணியால் ரிலீஸ் செய்யப்பட்டவர் துபே என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து ஏலம் நடைபெற்று வருகிறது.