சென்ன‍ை: 14வது ஐபிஎல் சீஸன் முதல் போட்டி துவங்கியுள்ள நிலையில், மும்பை – பெங்களூரு மோதும் முதல் போட்டியில், டாஸ் வென்ற பெங்களூரு அணி, பெளலிங் தேர்வு செய்துள்ளது.

இந்தியாவில், 14வது ஐபிஎல் சீஸன், பல கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் துவங்கியுள்ளது. முதல் போட்டி, மும்பை – பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெறகிறது.

கடந்தமுறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணிக்கு கேப்டனாக ரோகித் ஷர்மாவும், பெங்களூரு அணிக்கு கேப்டனாக விராத் கோலியும் செயல்படுகின்றனர்.

இந்த ஐபிஎல் தொடரிலும், இறுதிப்போட்டியை சேர்த்து, மொத்தம் 60 போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.

டாஸ் வென்ற பெங்களூரு அணி, முதலில் பெளலிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி, மும்பை அணியில், கேப்டன் ரோகித் ஷர்மாவும், கிறிஸ் லின்னும் களமிறங்கவுள்ளனர்.

 

 

[youtube-feed feed=1]