புதாபி

பிஎல் 2020 தொடரின் 20 ஆம் போட்டியில் ராஜஸ்தான் அணியை மும்பை அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாகத் தள்ளி வைக்கப்பட்ட ஐபிஎல் 2020 போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றன.  நேற்று அபுதாபியில் நடந்த 20 ஆம் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.  டாஸில் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

மும்பை அணியின் தொடக்க வீரர்களான அணித்தலைவர் ரோகித் சர்மா 35 ரன்களிலும் குயிண்டான் டி காக் 23 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.  அதன் பிறகு களமிற்ங்கிய சூரியகுமார் யாதவ் 67 பந்துகளில் 79 ரன்கள் அடித்து இறுதி வரை ஆட்டம் இழக்கைவ்ல்லை.  மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கட்டுகளை இழந்து 193 ரன்கள் எடுத்தது.

ராஜஸ்தான் ராயலுக்கு வெற்றி இலக்காக 194 ர்னகள் நிர்ணயிக்கப்பட்டது.  தொடக்க வீரர் ஜேய்ஷ்வால் ரன் ஏதும் எடுக்காமல் டிகாக் கேட்சில் அவுட் ஆனார்.  கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 6 ரன்களிலும் சஞ்சுவ் சாம்சன் ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள்.   அதிர்ச்சி அடைந்த ரசிகர்களுக்கு ஆறுதலாக ஜோஸ் பட்லர் 44 பந்துகளில் 70 ரன்கள் எடுத்தார்.

அவரு பேட்டிசன் வீசிய பந்தில் ஆட்டம் இழந்து  வெளியேறினார்.   இதைத் தொடர்ந்து ராஜஸ்தான் அணி 18.1 ஓவரில் 136 ரன்கள் எடுத்து அனைத்து விக்கட்டுகளையும் இழந்து தோல்வியைச் சந்தித்தது.  இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளது.

மும்பை அணியின் பவுலர் பும்ரா 4 ஓவரில் 4 விக்கட்டுகளை எடுத்து 20 ரன்கள் மட்டுமே அளித்ததால் அவருக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டுள்ளது.   இப்போட்டியில் ராஜஸ்தான் அணியின் தலைவர் கேப்டன் ஸ்மிட் தாமதமாகப் பந்து வீசியதால் அவருக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கபட்டுளது.