ஐபிஎல் 2020 தொடரின் இறுதிப்போட்டியில், இன்று துபாயில் நடைபெறும் ஆட்டத்தில், கோப்பைக்காக மும்பை – டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு டெல்லி அணி தகுதிபெறுவது இதுவே முதன்முறை. ஆனால், மும்பை அணி இதற்கு முன்னதாக 5 முறை இறுதிக்கு தகுதிபெற்று, அதில் 4 முறை கோப்பையை வென்றுள்ளது.

இந்த ஐபிஎல் தொடரில், பிளே ஆஃப் உட்பட, மொத்தம் 3 போட்டிகளில் இதுவரை மும்பை – டெல்லி அணிகள் மோதியுள்ளன. அதில், மூன்றிலுமே மும்பையே வென்றது. தற்போது, இந்த இரு அணிகளும் 4வது முறையாக மோதவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றையப் போட்டியில், மும்பை வென்றால், ஐபிஎல் கோப்பையை 5வது முறையாக வென்று சாதனை படைக்கலாம். அதேசமயம், டெல்லி வென்றால், ஐபிஎல் கோப்பையை முதன்முறையாக வென்று மகிழலாம்.

துபாய் மைதானத்தில், இரவு 7.30 மணிக்கு போட்டி துவங்குகிறது.