மும்பை:
ஐபிஎல் தொடரில் சென்னை – ஹைதராபாத் அணிகள் இடையே நடந்த போட்டியில் சென்னை அணி 13ரன்கள் வித்தியாசத்திலும், லக்னோ – டெல்லி அணிகள் இடையே நடந்த போட்டியில் லக்னோ அணி 6 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.
சென்னை – ஹைதராபாத் அணிகள் இடையே நடந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்தது. 203 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய ஹைதராபாத் அணி 189 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதன் மூலம் சென்னை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
லக்னோ – டெல்லி அணிகள் இடையே நடந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி 195 ரன்கள் எடுத்தது. 196 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய டெல்லி அணி 189 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. இதன் மூலம் லக்னோ அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்க உள்ள போட்டியில் கொல்கத்தா – ராஜஸ்தான் அணிகள் மோத உள்ளன.