கொல்கத்தா:

பிஎல் தொடரின் நேற்று இரவு ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இணியை  7 விக்கெட் வித்தியாசத்தில் டில்லி டெல்லி கேபிட்டல் அசத்தல் வெற்றி வெற்றது.

ஐபிஎல் தொடரின் 26-வது லீக்போட்டி கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ்  இடையே கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று  இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில், மோதின.

டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, கொல்கத்தா அணி மட்டையுடன் களம் புகுந்தது. அணியின்  தொடக்க ஆட்டக்காரர் களாக ஜோ டென்லி, ஷுப்மான் கில் களமிறங்கினர்.

வந்த வேகத்தலேயே முதல் ஓவரில் இஷாந்த் சர்மாவின் பந்துக்கு ஜோ டென்லி வெளியேறினார். இது கொல்கத்தா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய.  தொடர்ந்து  ராபின் உத்தப்பா தில்லாக இறங்கினார். அவர்  கில்லுடன் நிதானமாக ஆடினார். 28 ரன்னில் அவரும் வெளியேற,  நிதிஷ் ரானா 11 ரன்னிலும் அவுட்டாகினர். சிறப்பாக ஆடிய வந்த  ஷுப்மான் கில் அரை சதமடித்து 65 ரன்னில் ஆட்டமிழந்தார்.  தொடர்ந்து இறங்கிய ஆண்ட்ரு ரசல் தனது அதிரடியை தொடர்ந்தார். ரசல் 21 பந்தில் 4 சிக்சர், 3 பவுண்டரியுடன் 45 ரன்னில் வெளியேறினார்.  இறுதியில், ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்துள்ளது.

டெல்லி அணி சார்பில் கிறிஸ் மாரிஸ், ரபடா, கீமோ பால் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து 179 ரன் இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி சார்பில், தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷாவும், ஸ்ரேயாஸ் அய்யரும் களமிறங்கினார். ஆனால் அவர்கள் வந்த வேகத்தில் சொற்ப ரன்னில் வெளியேற   5.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 57 ரன்னாக இருந்தது. 3-வது விக்கெட்டுக்கு ரிஷாப் பான்ட்,  ஷிகர் தவானுடன் இணைந்தார். இருவரும் அடித்து ஆடி அணியை வெற்றியை நோக்கி வீறுநடை போட வைத்தனர். ஷிகர் தவான் 32 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். அணியின் ஸ்கோர் 17.1 ஓவர்களில் 162 ரன்னாக உயர்ந்த போது ரிஷாப் பான்ட் 31 பந்தில் 2 சிக்சர், 4 பவுண்டரி உடன் 46 ரன்கள் எடுத்த நிலையில்,நிதிஷ் ராணா பந்து வீச்சில்  கேட்ச்  கொடுத்து வெளியேறினார். தொடர்ந்து  காலின் இங்ராம் களம் இறங்கினார்.

இந்த நிலையில், 18.5 ஓவர்களில் டெல்லி அணி 3 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஷிகர் தவான் 63 பந்துகளில் 11 பவுண்டரி, 2 சிக்சருடன் 97 ரன்னும், காலின் இங்ராம் 6 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 14 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

ஐ.பி.எல். போட்டியில் ஷிகர் தவான் அடித்த அதிகபட்ச ஸ்கோர் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஷிகர் தவார்  ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

7-வது ஆட்டத்தில் ஆடிய டெல்லி அணி பெற்ற 4-வது வெற்றி இதுவாகும். இந்த சீசனில் டெல்லி அணி, 2-வது முறையாக கொல்கத்தாவை வீழ்த்தி இருக்கிறது.