மும்பை:

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று  இரவு நடைபெற்ற ஆட்டத்தில் பொல்லார்ட் அதிரடி ஆட்டம் காரணமாக  மும்பை இந்தியன்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின் 24-வது லீக் ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இடையே நேற்று  இரவு 8 மணிக்கு  மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது.

இதில்  டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் பொல்லார்ட் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, , பஞ்சாப் அணி மட்டையுடன் களமிறங்கியது.  பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் கெயில், லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

முதலில் பொறுமையாக ஆடிய இருவரும் பின்னர் தங்களது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தனர். குறிப்பாக, கெயில் சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். இதனால் அவர் அரை சதமடித்து அசத்தி னார். இந்த போட்டியில் ராகுல் தனது முதல் ஐபிஎல் சதத்தை நிக்ழத்தினார்.

இறுதியில், பஞ்சாப் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்து மும்பை அணிக்கு 198ரன்கள் இலக்கு நிர்ணயித்தது.

அதையடுத்து களமிறங்கிய மும்பை அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக சித்தேஷ் லாட் குயின்டான் டி காக் களமிறங்கினர்.  இவர்கள் வந்த வேகத்தில்வெளியேறினர்.  சித்தேஷ் லாட் 15 ரன்னிலும், குயின்டான் டி காக் 24 ரன்னிலும் வெளியேறியது மும்பை ரசிகர்களுக்கு வருத்தத்தை எற்படுத்தியது.

தொடர்ந்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 21 ரன்னிலும்,  இஷான் கிஷன் 7 ரன்னிலும், ஹர்திக் பாண்ட்யா 19 ரன்னிலும், குருணல் பாண்ட்யா 1 ரன் எடுத்த நிலையில் அடுத்தடுத்து வெளியேற ஆட்டம் சூடுபிடித்து.

மும்பை அணி கேப்டன்  பொல்லார்ட் மட்டும்  நின்று நிதானமாகவும், அதிரடியாகவும் ஆடி வந்தார். ஆட்டத்தில் இறுதி ஓவர்களில் அவர் தனது அதிரடியை காட்ட பந்துகள் சிக்சர்களாக பறந்தது. கடைசி ஓவரில் மும்பை அணியின் வெற்றிக்கு 15 ரன் தேவைப்பட்ட நிலையில், பந்தை பஞ்சாப் அணி பவுலர் அங்கித் ராஜ்பூத் ஆக்ரோஷமாக  வீசினார். ‘

ஆனால, அவர் வீசிய பால்  நோ-பாலாக  மாற, அந்த பந்தையும் பொல்லார்ட் சிக்சருக்கு விரட்டி னார். அடுத்த வீசப்பட்ட பந்தும் பவுண்டரிக்கு செல்ல பொல்லார்ட் 31 பந்தில் 3 பவுண்டரி, 10 சிக்சர் உடன் 83 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார்.

மீதமுள்ள  3 பந்துகளில் ராஜ்பூத் 2 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார். கடைசி பந்தில் வெற்றிக்கு 2 ரன் தேவையாக இருந்த நிலையில், அதை  எதிர்கொண்ட ஜோசப் அதிரடியாக ஓடி 2 ரன் எடுத்து திரில் வெற்றியை பெற்றுத்தந்தார்.

மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத் தில் வெற்றி பெற்றது. மும்பை அணிக்கு இது 4-வது வெற்றியாகும். நேற்றைய ஆட்டம் தொடக்கத்தில் விறுவிறுப்பின்றி இருந்தாலும் இறுதியில் செம விறுவிறுப்பாக நடைபெற்றது.