சென்னை
ஐபிஎல் 2019 போட்டிகளில் நேற்று நடந்த முதல் தகுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மும்பை இந்தியன் அணி வென்று இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளது.
நேற்று சென்னை சேப்பாக்கத்தில் ஐபிஎல் 2019 போட்டிகளின் முதல் தகுதிச் சுற்று போட்டி நடந்தது. இதில் புள்ளி வரிசையில் முதல் இரு இடங்களை பிடித்த மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இவ்விரு அணிகளும் ஏற்கனவே ஐபிஎல் போட்டிகளில் சாம்பியன்களாக இருந்ததால் ரசிகர்களிடையே இந்த போட்டியை காண மிகவும் ஆர்வம் இருந்தது.
போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பாப் டுப்ளிஸ்சிஸ் மற்றும் ஷேன் வார்ட்சன் பேட்டிங்கை தொடங்கினர். மலிங்கா வீசிய முதல் ஓவரில் சென்னை அணி ஒரு ரன் மட்டுமே எடுத்தது. இரண்டாம் ஓவரில் ஆறு ரன் எடுட்த பாப் மூன்றாம் ஓவரில் அவுட் ஆனார்.
அவருக்கு அடுத்து வந்த சுரேஷ் ரெய்னாவை 5 ரன்களில் ஜெயந்த் யாதவ் பந்து வீசி அவரே கேட்ச் பிடித்து அவுட் ஆக்கினார். அதன் பிறகு ஷேன் வாட்சன் ஒரு ஓவரில் 2 பவுண்டரிகள் அடித்த போதிலும் 10 ரன்களில் ஆட்டம் இழந்தார். பவர் பிளேவில் மட்டும் சென்னை அணி 32 ரன்களை 3 விக்கட்டுகளை இழந்து எடுத்திருந்தது. அடுத்து அம்பத்தி ராயுடு மற்றும் எம் விஜய் அணி நிதானமாக விளையாடினார்கள்
இந்த அணி 12.1 ஓவர்களில் 65 ரன்களை எட்டி இருந்த போது எம் விஜய் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அணியின் தலைவர் தோனி அம்பத்தி ராயுடுவுடன் இணைந்து விளைஅயடினார். சென்னை தனது 100 ரன்களை 17.1 ஓவர்களில் எட்டியது. பவுலர் மலிங்காவின் பந்து வீச்சில் ஒரே ஒவரில் தோனி அடுத்தடுத்து இரு சிக்சர்கள் அடித்தார். கடைசி ஓவரில் பும்ரா பந்து வீசிய போது இஷான் கிஷன் கேட்ச் பிடித்தார்.
முதலில் அவுட் ஆனதாக அறிவிக்கப்பட்ட டோனி டிவி ரிப்ளே மூலம அது நோபால் என கன்டறியப்பட்டதால் அவுட் இல்லை என அறிவிக்கபட்டது. மொத்தத்தில் சென்னை அணி 20 ஓவர்களில் 131 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அம்பத்தி ராயுடு 42 ரன்களுடனும், தோனி 37 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். மும்பை இந்தியன்ஸ் அனிக்கு 132 ரன்கள் வெற்றி இலக்காக அறிவிக்கப்பட்டது.
மும்பை இந்தியன்ஸ் அணி தொடக்க வீரர்களான ரோகித் சர்மா மற்றும் குவிண்டான் டி காக் ஆகியோர் களம் இறங்கினர். ரோகித் சர்மா 4 ரன்களிலும் குவிண்டான் 8 ரன்களிலும் ஆட்டம் இழந்து வெளியேறினர். அடுத்ததாக இஷான் கிஷன் மற்றும் சூரியகுமார் அணி சிறப்பாக ஆடினர். இவர்களின் ஆட்டத்தினால் மும்பை அணி தனது 100 ரன்களை 13.2 ஓவர்களில் எடுத்தது. இம்ரான் தாகிர் வீசிய பந்தில் 28 ரன்கள் எடுத்திருந்த இஷான் கிஷன் ஆட்டமிழந்தார்.
அவரை அடுத்து களம் இறங்கிய குருணல் பாண்ட்யா ரன் ஏதும் எடுக்காமல் இம்ரான் தாகிர் பந்து வீச்சில் அவரிடமே கேட்சி அளித்து வெளியேறினார். அதன் பிறகு ஹர்திக் பாண்ட்யா மற்றும் சூர்யகுமார் அணி சிறப்பாக விளையாடியது. மும்பை இந்தியன்ஸ் அணி 18.3 ஓவர்களில் வெற்றி இலக்கான 132 ரன்களை 4 விக்கட்டுகள் இழப்பில் அடைந்தது. அதை ஒட்டி மும்பை அணி 6 விக்கட் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது.
மும்பை அணி இறுதிப் போட்டிக்கு 5 ஆம் முறையாக சென்றுள்ளது. தற்போது தோல்வியை சந்தித்துள்ள சென்னை அணிக்கு இறுதிப் போட்டிக்கு செல்ல மேலும் ஒரு வாய்ப்பு உள்ளது. இன்று நடைபெற உள்ள இரண்டாம் தகுதிச் சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் வரும் 10 ஆம் தேதி அன்று சென்னை அணி மோத உள்ளது. அதில் வெற்றி பெற்றால் சென்னை அணி இறுதிப் போட்டிக்கு செல்ல தகுதி பெற முடியும்.