விசாகப்பட்டினம்:
ஐபிஎல் தொடரின் 2வது தகுதிச்சுற்று இன்று இரவு விசாகப் பட்டினத்தில் உள்ள ஏ.சி.ஏ. வி.டி.சி.ஏ., மைதானத்தில் போட்டி நடைபெற்று வருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கும் இடையே நடைபெறும் போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. அதைத்தொடர்ந்து டெல்லி அணி மட்டையுடன் களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக பிருத்வி ஷா, ஷிகர் தவான் களமறிங்கினர். ஆனால், சாஹரின் பந்து வீச்சில் 6வது பந்தில் 5 ரன்கள் எடுத்த நிலையில் பிருத்விஷா எல்பிடபிள்யு ஆகி வெளியேறினார். தொடர்ந்து தவானுக்கு கொலின் கம்பெனி கொடுத்தார். இந்த நிலையில், ஹர்பஜன் பந்துக்கு தோனியிடம் கேட்ச் கொடுத்து தவான் 18 ரன்னில் வெளியேறினார். அப்போது அணியின் ஸ்கோர் 37 ரன்கள் மட்டுமே இருந்தது. இதனால் ஆட்டம் தொடக்கத்திலேயே தடுமாறியது. அடுத்து கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் களமிறங்கினர். இந்த நிலையில், முன்ரே அதிரடி ஆட்டத்தை தொடங்கினார். அவர் தொடர்ந்து 4 பவுண்டரிகளை விளாச, 27 ரன் எடுத்திருந்தநிலையில் ஜட்டு பந்து வீச்சில் பிராவோவிடம் கேட்ச் கொடுத்துபரிதாபமாக வெளியேறினார்.
தொடர்ந்து ஷ்ரேயாஸ் அய்யர் 13 ரன்னில் தாகிர் பந்து விச்சில் ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேற ரிஷபந்த் நின்று ஆடத் தொடங்கினார். டெல்லி அணி 15 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்திருந்தது.
களத்தில் இருந்த ரிஷப் பந்த், ரூதர்போர்டு இருவரும் தங்களது திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். இந்த நிலையில் , ரூதர்போர்டு ஆப் சைடில் வீசப்பட்ட லென்த் பாலை தூக்கி அடிக்க முயன்று வாட்சனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் 12 பந்துகளை சந்தித்து ஒரு சிக்சர் உள்பட 10 ரன்கள் சேர்த்தார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் ரிஷப் பந்த் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி என விளாச, ஓவர் முடிவில் அணியின் ஸ்கோர் 116 ஆக உயர்ந்தது. அடுத்து களமிறங்கிய கீமோ பால், 3 ரன்கள் எடுத்த நிலையில், பிராவோ பந்தில் கிளீன் போல்டானார்.
19வது ஓவரின் முதல் மூன்று பந்துகளை தட்டிவிட்டு 6 ரன்கள் ஓடி எடுத்த ரிஷப் பந்த், 4வது பந்தை தூக்கி அடிக்க முயன்று கேட்ச் கொடுத்து வெளியேறினார். பின்னர் களமிறங்கிய டிரென்ட் போல்ட், ஜடேஜா வீசிய கடைசி ஓவரில், 2வது பந்தில் தன் முழு பலத்தையும் காட்டி சிக்சர் அடித்தார். ஆனால், அடுத்த பந்தில் போல்டானார். பின்னர் வந்த இஷாந்த் சர்மா, 5வது பந்தில் பவுண்டரியும், கடைசி பந்தில் சிக்சரும் அடிக்க, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு, 147 ரன்கள் எடுத்திருந்தது.
இதன் காரணமாக சென்னை அணிக்கு 148 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.