டில்லி:
ஐபிஎல் 2018ம் ஆண்டுக்கான லீக் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சென்னையில் ஐபிஎல் விளையாட எழுந்த எதிர்ப்பு காரணமாக, சென்னையில் நடைபெற இருந்த போட்டிகள் புனேவுக்கு மாற்றப்பட்டதால் ஐபிஎல் தொடரின் கடைசி 4 லீக் ஆட்டங்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
ஐபிஎல்லின் 11வது சீசன் கடந்த மாதம் (ஏப்ரல்) 7ந் தேதி முதல் நடைபெற்றுவருகிறது. 56 லீக் போட்டிகளை கொண்ட இந்த தொடர் இந்த மாதம் 27ம் தேதியுடன் முடிவடைய உளளது.
இநத போட்டிகளில் வெற்றிபெற்று முதல் 4 இடங்களை பெறும் அணி, பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். இறுதி போட்டிக்கு தகுதி பெறுவதற்காக இரண்டு தகுதி சுற்று போட்டிகள் நடைபெறும்.
அணிகள் இதுவரை பெற்றுள்ள பாயிண்டுகளின் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடித்த அணிகள், முதல் தகுதி சுற்று போட்டியில் மோதும். இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெறும்.
புள்ளி பட்டியலில் மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் இருக்கும் அணிகள், எலிமினேட்டர் சுற்றில் மோதும். இதில் தோற்கும் அணி தொடரில் இருந்து வெளியேறும்.
இதில் வெற்றி பெறும் அணிக்கும், முதல் தகுதி சுற்றில் தோல்வியடைந்த அணிக்கும் இடையே இரண்டாவது தகுதி சுற்று போட்டி நடைபெறும். இதில் வெற்றி பெறும் அணி இறுதி சுற்றுக்கு தகுதி பெறும்.
எலிமினேட்டர் மற்றும் இரண்டாவது தகுதி சுற்று போட்டிகள் புனேவில் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், தவிர்க்க முடியாத சூழல் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்பான போட்டிகள் புனேவில் நடைபெற்று வருவதால், புனேவில் நடைபெற இருந்த எலிமினேட்டர் மற்றும் இரண்டாவது தகுதி சுற்று ஆகிய இரண்டு போட்டிகளும் கொல்கத்தா மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
மே 22 – முதல் தகுதி சுற்று போட்டி – மும்பை வான்கடே மைதானம்
மே 23 – எலிமினேட்டர் போட்டி – கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம்
மே 25 – இரண்டாவது தகுதி சுற்று போட்டி – கொல்கத்தா ஈடன் கார்டன்
மே 27 – இறுதி போட்டி – மும்பை வான்கடே மைதானம்