ஐதராபாத்
ஐபிஎல் 2018 லீக் போட்டியில் பெங்களூரு அணியை ஐதராபாத் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
நேற்று இரவு ஐதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடந்த ஐபிஎல் 2018 போட்டியின் லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. பேட்டிங்கில் களம் இறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து146 ரன்கள் எடுத்திருந்தது. பெங்களூரு அணி வீரர்களான சௌதி, சிராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஐதராபாத் அணிக்கு சவால் கொடுத்தனர்.
அடுத்து பெங்களூரு அணி 147 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் ஆட்டம் இழந்தது பெங்களூரு அணிக்கு சிறிதே அதிர்ச்சியை கொடுத்தது. அந்த அணித்தலைவர் கோஹ்லியும் 39 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ஆட்ட இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 141 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
இதை ஒட்டி சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்ததாக அறிவிக்கப்பட்டது.