டில்லி

பிஎல் 2018 போட்டிகளில் நேற்றைய லீக் ஆட்டத்தில் டில்லி டேர் டெவில்ஸ் அணி ராஜஸ்தான் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை தோற்கடித்தது.

ஐபில் 2018 போட்டிகளின் 32 ஆவது லீக் ஆட்டம் நேற்று டில்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடந்தது.    இந்த அணியில் ராஜஸ்தான் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் டில்லி டேர் டெவில்ஸ் அணியும் மோதின.  டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது.   போட்டி ஆரம்பிக்கும் போது மழை பெய்ததால் சுமார் 1.5 மணி நேரம் தாமதமாக போட்டி தொடங்கியது.   போட்டி 18 ஓவராக மாற்றப்பட்ட்து.

ஆட்டம் தொடங்கி நடக்க ஆரம்பித்த போது 17.1 ஓவரில் டில்லி அணி 6 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்திருந்தது.   அப்போது மீண்டும் மழை பெய்ததால் ஆட்டம் தடை பட்டது.    சுமார் 30 நிமிடங்களுக்கு பின் மழை நின்றதும் மீண்டும் தொடங்கிய ஆட்டத்தில் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி ராஜஸ்தான் அணிக்கு 12 ஓவர்களில் 151 ரன்கள் எடுக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டது.

ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் நல்ல முன்னேற்றத்தை காட்டிய போதும் அடுத்து வந்த வீரர்கள் மிகக் குறைந்த ரன்களில் ஆட்டம் இழந்தனர்.   12ஆம் ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் இழந்து 146 ரன்கள் எடுத்டிருந்தன.  டில்லி அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.