ஐபிஎல் தொடரில் விளையாடும் வெளிநாட்டு வீரர்களுக்கான விதிமுறைகளில் பிசிசிஐ மாற்றம் செய்துள்ளது.
ஏலத்தில் பங்கேற்க பதிவு செய்த வெளிநாட்டு வீரர் ஏலத்தில் எடுக்கப்பட்ட பிறகு சரியான காரணங்கள் இல்லாமல் ஐபிஎல் தொடங்குவதற்கு முன் வெளியேறினால் இரண்டு ஐபிஎல் சீசனுக்கான ஏலத்தில் பங்கேற்க தடை விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
மேலும், மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மெகா ஏலம் மற்றும் மெகா ஏலத்துக்கு இடைப்பட்ட ஆண்டுகளில் வீரர்கள் தக்கவைக்க நடைபெறும் மினி ஏலம் ஆகியவற்றில் கேட்கப்படும் குறைந்த ஏலத்தொகையே அவர்களுக்கு வழங்கக்கப்படும்.
மினி ஏலத்தில் ஒரு வெளிநாட்டு வீரரை தக்க வைக்க அதிகபட்ச ஏலத் தொகை ரூ. 18 கோடி என உள்ளது. முந்தைய மெகா ஏலத்தில் குறிப்பிட்ட வெளிநாட்டு வீரருக்கு ரூ. 20 ஏலம் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தாலும் அதன்பின்னான மினி ஏலத்தில் அந்த வீரரை தக்கவைக்க ரூ. 16 கோடி மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டால் அவருக்கு ரூ. 16 கோடி மட்டுமே வழங்கப்படும்
அதே மெகா ஏலத்தில் ரூ. 16 கோடிக்கு நிர்ணயம் செய்யப்பட்ட ஒருவருக்கு மினி ஏலத்தில் அதிக தொகை கோரப்பட்டாலும் அவருக்கு ரூ. 16 கோடியே வழங்கப்படும் என்று விதிகளை மாற்றியுள்ளது.
ஏலத்தில் வாங்கப்பட்ட பிறகு வீரர்கள் விலகுவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐபிஎல் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்ததை அடுத்து பிசிசிஐ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஏலத்துக்கு பின் போட்டியில் இருந்து காயம் மற்றும் மருத்துவ காரணங்களுக்காக போட்டியில் இருந்து விலகும் வீரர்களுக்கு விதிவிலக்கு அளித்துள்ள பிசிசிஐ அந்த நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் மூலம் உறுதி செய்யவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.