அக்டோபர் 25ம் தேதி டெல்லி ஒலிம்பிக் பவனில் சிறப்புப் பொதுக் கூட்டம் நடைபெறும் என் அறிவிப்பை ஒலிம்பிக் சங்க இணைச் செயலாளரும், செயல் தலைமை செயல் அதிகாரியுமான கல்யாண் சவுபே வெளியிட்டார். அப்போது, பி.டி.உஷா மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தியா ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பி.டி. உஷா மீது அந்த சங்கத்தின் உறுப்பினர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக பி.டி. உஷா தேர்வு செய்யப்பட்ட நிலையில், இந்த சங்கத்தின் முதல் பெண் தலைவர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது. இதற்கிடையில் மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையான நிலையில், இதில் பிடி உஷா பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக, கடந்த சில மாதங்களாக பி.டி. உஷாவுக்கும் சங்கத்தின் உறுப்பினர் குழுவினர்களுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்ட நிலையில், கவுன்சில் உறுப்பினர்கள் விதிகளை மீறியதாக பி.டி. உஷா குற்றஞ்சாட்டி, அதற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.
ஆனால், தலைவருக்கு உள்ள அதிகாரத்தை பி.டி. உஷா தன்னிச்சையாக செயல்படுத்துகிறார் என்று உறுப்பினர்கள் கூறிய நிலையில், அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளன
. இந்திய விளையாட்டு துறைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் பி.டி. உஷா செயல்பட்டதாக தீர்மானம் இயற்றப்பட்ட நிலையில், வரும் 25ஆம் தேதி இந்த தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், ஒலிம்பிக்கில் மனு பார்க்கர் இரண்டு பதக்கங்களை பெற பிடி உஷா உதவினார் என்றும் அவரது கோச் ராணா தெரிவித்து உள்ளார். மனு பார்க்கரின் இந்த இரண்டு பதக்கங்களுக்கான பெருமையை பி.டி.உஷாவுக்குத் தருகிறேன். எங்களுக்கு என்ன பிரச்சனைகள் இருந்தாலும் போராடி எனக்கு எல்லா ஆதரவையும் அளித்தவர் அவர், ”என்று ராணா அவருக்கு ஆதரவாக தெரிவித்து உள்ளார்.
“பி.டி. உஷா ஏதாவது செய்ய முயற்சிக்கிறார், எல்லோரும் அவளைப் பின்தொடர்கிறார்கள். அவர் என்ன செய்தாலும் அவர் செய்யட்டும், ”என்று 51 வயதான மூத்த உறுப்பினர் ஒருவர் கூறியதுடன், அவள் என்ன தவறு செய்தாள் என்பதை பொதுவில் வெளியிடுங்கள். நீங்கள் அவளை ஒன்றரை வருடங்கள் மட்டுமே குறிவைக்க விரும்புகிறீர்கள். அவளுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்; அவளை கீழே இழுப்பதை விட அவளுக்கு ஆதரவாக இருங்கள்.” என தெரிவித்துள்ளார்.
“நீங்கள் ஒலிம்பிக்கிற்குச் சென்று 6-7 பதக்கங்களுடன் திரும்பி வருவது மிகவும் வேதனையானது, பின்னர் நாங்கள் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் பேசுகிறோம், அதன் பிறகு, இரண்டு ஆண்டுகளாக யாரும் இல்லை…”
“ஒலிம்பிக்களுக்கு முன்பும், அதன் போதும் நானும் மனுவும் என்ன அனுபவித்தோம் என்பது அனைவருக்கும் தெரியும். கடவுளின் கிருபையால், பிஸ்டல் துப்பாக்கி சுடுவதில் இரண்டு பதக்கங்களும், ரைஃபிளில் மற்றொரு பதக்கமும் கிடைத்துள்ளது, ”என்று நான்கு முறை ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவரும் முன்னாள் உலக சாம்பியன் துப்பாக்கி சுடும் வீரருமான கூறினார்.