சென்னை:
முதல்வர் ஸ்டாலின் நுால் வெளியீட்டு விழாவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் நேற்று சோனியாவை, டி.ஆர்.பாலு சந்தித்தார். அப்போது, முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள, அவரது வரலாற்று நுாலான, ‘உங்களில் ஒருவன் பாகம் ௧’ நுால் வெளியீட்டு விழாவுக்கான அழைப்பிதழை சோனியாவிடம் வழங்கினார். விழாவுக்கு வருமாறு, முதல்வர் சார்பில் வேண்டுகோள் விடுத்தார்.