சென்னை:
சென்னையில் இன்று தொழில் முதலீட்டாளர் மாநாடு நடைபெற உள்ளது.

தமிழகத்திற்கு புதிய முதலீட்டாளர்களை ஈர்க்கக்கூடிய வகையில், இன்று சென்னையில் உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு தமிழக முதல்வர் தலைமையில் நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் 60 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளதாகவும், ரூ. 70 ஆயிரம் கோடி முதலீடுகளை ஈர்க்கவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.